பக்கவாதம், நரம்பு தளர்ச்சி, எலும்பு பலம் குறைதல், ஞாபக மறதி போன்ற நோயால் முதியவர்கள் பாதிக்கப்படுகின்றனர். உலக மக்கள் தொகையில் முதியோர்களின் எண்ணிக்கை 10 சதவீதம் ஆகும். இந்தியாவில் 8 சதவீதம். பார்வை குறைதல், சோர்வு, கழுத்து எலும்பு தேய்வு, உயர் ரத்த அழுத்தம், சர்க்கரை நோய், இதய கோளாறு, மன அழுத்தம் போன்றவையாலும் முதியவர்கள் பாதிக்கப்படுகின்றனர்.
எலும்பு பலம் குறைவதால், திடீரென்று கால் தவறி கீழே விழுகின்றனர். அப்போது இடுப்பு எலும்பு, முதுகுத் தண்டுவடம், கை மணிக்கட்டு எலும்பில் முறிவு ஏற்படுகிறது. தனியாக இருக்கும் முதியவர்களுக்கு மன அழுத்தம் ஏற்படுகிறது. ஒரு சிலரின் மனநிலையும் பாதிக்கப்படுகிறது. முதுமை என்றாலே நோய்களும் கூடவே வந்துவிடுகின்றன.
4,5 நோய்கள் ஒன்றாக வருகின்றன. அவர்களை கவனிப்பது என்பது குழந்தையைக் கவனிப்பது போன்றது. அதே மாதிரிதான் சிகிச்சை அளிப்பதும். முதியவர்களுக்கு நோயின் தன்மையைப் பொறுத்து அறுவை சிகிச்சை செய்யப்படுகிறது. 100 வயது முதியவருக்குக்கூட அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. முதியோருக்கு ஏற்படும் பக்கவாதம், நினைவாற்றல் குறைவு, மூளை அறிவுத்திறன் குறித்தும் அடிக்கடி கீழே விழும் முதியவர்களுக்கு ஏற்படும் பிரச்சினைகள் பற்றி ஆய்வுகள் நடந்து வருகின்றன.
அது போன்ற பாதிப்பு வராமல் இருக்க செய்ய வேண்டியது என்ன, ஒருவேளை இந்த பாதிப்புகள் வந்தால் சிகிக்சை அளித்து விரைவாக முதியவர்களை உடல்நலம் பெற வைத்து இயல்பு நிலைக்கு கொண்டு வருவதற்கான முறைகள் பற்றித்தான் இந்த ஆய்வுகள் தீவிரமாக நடந்து வருகின்றன. ஒவ்ெவாரு ஆய்வு முடிவும் சாதகமான நிலையை எட்டும்போது, புதிய சிகிச்சைகள் மருத்துவ உலகில் அறிமுகம் ஆகிக்கொண்டிருகின்றன.