அதிகரிக்கப்படும் ஊதியம்!

தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார, தேசிய குறைந்தபட்ச மாதச் சம்பளம் மற்றும் தேசிய குறைந்தபட்ச தினக்கூலியை உயர்த்த அமைச்சரவைக்கு முன்மொழிந்துள்ளார்.

அதன்படி, தற்போதைய தேசிய குறைந்தபட்ச மாத ஊதியம் 12,500 ரூபாவிலிருந்து 17,500 ரூபாவாக 5000 ரூபாவினாலும் தேசிய குறைந்தபட்ச தினக்கூலியாக 500 ரூபாவில் இருந்து 700 ரூபாவாக 200 ரூபாவினாலும் அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக, ஊழியர்களின் குறைந்தபட்ச ஊதியச் சட்டத்தில் திருத்தம் செய்யப்படவுள்ளது.

தேசிய நுகர்வோர் விலைச் சுட்டெண்ணின் கீழ் பணவீக்கம் ஜூன் மாதத்தில் 59% ஆக அதிகரித்துள்ளதால், குறைந்த ஊதியத்தில் பணியாற்றும் தொழிலாளர்கள் கடும் நெருக்கடியில் உள்ளதாக அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

மேலும் தேசிய தொழிலாளர் ஆலோசனைக் குழுவும் குறைந்தபட்ச ஊதியத்தை உயர்த்த ஒப்புக்கொண்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.

Recommended For You

About the Author: webeditor