இலங்கையை போன்ற திவாலான நிலைக்கு, பாகிஸ்தான் செல்லும் நிலை ஒன்று தவிர்க்கப்பட்டதாக பாகிஸ்தானிய நிதியமைச்சர் மிஃப்தா இஸ்மாயில் (Miftah Ismail) தெரிவித்துள்ளார்.
வெளிநாட்டு செய்தி சேவை ஒன்றுக்கு வழங்கிய செவ்வியொன்றின்போது அவர் (Miftah Ismail) இதனை கூறினார். இதன்போது அவர் மேலும் கூறுகையில்,
கணிசமான கொள்கை மாற்றங்கள் மற்றும் சிக்கன நடவடிக்கைகள் காரணமாக இலங்கையை போன்ற ஒரு நிலைமை தவிர்க்கப்பட்டதாகவும் குறிப்பிட்டுள்ளார். எரிசக்தி இறக்குமதியின் அதிக விலை காரணமாக பாகிஸ்தான் நெருக்கடியின் விளிம்பிற்கு தள்ளப்பட்டது.
அதன் வெளிநாட்டு நாணய கையிருப்பு 9.8 பில்லியன் டொலர்களாக குறைந்ததுடன் இது ஐந்து வார இறக்குமதிகளுக்கு போதுமானதாக இல்லை. அத்துடன் இந்த ஆண்டு அமெரிக்க டொலருக்கு எதிராக பாக்கிஸ்தானிய ரூபாய் மிகக் குறைந்த அளவு வரை பலவீனமடைந்தது.
எனினும் சர்வதேச நாணய நிதியம், கடந்த மாதம் பாகிஸ்தானுடன் பணியாளர்கள் அளவிலான ஒப்பந்தத்தை எட்டியுள்ளதன் மூலம், கோரபட்ட 6 பில்லியன் டொலர் கடன் திட்டத்தில் 1.17 பில்லியன் டொலர்களை பெற்றுக்கொள்ள வழியேற்பட்டுள்ளது.
அதேவேளை முன்னதாக பாகிஸ்தான் இலங்கையின் பாதையில் செல்லப்போகிறது என்று கவலை இருந்தது. எனினும் சில குறிப்பிடத்தக்க மாற்றங்களைச் செய்தமையால்,அந்த சூழ்நிலையை தடுத்துள்ளதாக பாகிஸ்தானிய நிதியமைச்சர் (Miftah Ismail) குறிப்பிட்டுள்ளார்.
எனினும் தற்போது பாக்கிஸ்தான் இப்போது சரியான திசையில் செல்கிறது என்று இஸ்மாயில் தெரிவித்துள்ளார்.