இலங்கையில் தற்போது பரவி வரும் B.A4 மற்றும் B.A5 கோவிட் மாறுபாடு நுரையீரலை சேதப்படுத்துவதாக அமெரிக்காவில் உள்ள ஜோன் ஹொப்கின்ஸ் பல்கலைக்கழகத்தின் வளவாளர் மருத்துவர் சஞ்சய் பெரேரா தெரிவித்துள்ளார்.
ஊடகமொன்றுக்கு அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
அதன்படி ஐரோப்பா மற்றும் ஆபிரிக்காவிலும் இவ்வகையான கோவிட் மாறுபாடு மிக வேகமாகப் பரவி வருவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
கோவிட் தொற்றால் உயிரிழப்பு
இதேவேளை, ஆறு பேர் கோவிட் தொற்றால் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் நேற்று உறுதிப்படுத்தியுள்ளார்.
மேலும், நாட்டில் நேற்று 214 பேர் கோவிட் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரியவருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.