நல்லவர்களை கடவுள் அதிகம் சோதிப்பது ஏன் என்பதற்கு திருமுருக கிருபானந்த வாரியார், பதில் சொல்லி இருக்கிறார். “கெட்டவங்க எல்லாம் நல்லா இருக்காங்க! நல்லவங்களைத்தான் இந்த சாமி சோதனை பண்ணுது! இந்த எண்ணம் நம்ம பல பேருக்கு உண்டு.
சாமி அப்படி செய்யக் காரணம் என்ன? தண்ணி எடுக்குற இந்த இரும்பு பக்கெட் இருக்குதுல்ல; அது கிணற்றின் ஒரு ஓரமாக் கெடக்கும்; குழாய் அடியில கெடக்கும். அத நெருப்புல போட்டு, அடிச்சு-நீட்டி-அரம் வெச்சு ராவி, எல்லாம் செய்வது இல்லை. ஆனால் இந்த தங்கம் இருக்குதே, அத நெருப்புல போட்டு ஊதி உருக்கி, அடிச்சு – நீட்டி – அரம் வெச்சு ராவி, எல்லாம் செய்வோம். தங்கத்துக்கு ஏன் இந்தக் கஷ்டம்? அது தங்கம்! உயர்ந்தது! அதுனாலதான்.
நாமும் அந்தத் தங்கத்த காதுல, மூக்குல, கழுத்துல, கையில- இப்படி பல இடத்திலயும் ஆபரணமா செஞ்சு போட்டுக்குவோம். நல்லவங்க தங்கம் மாதிரி; எல்லா கஷ்டத்தயும் தாங்கிக்கிட்டு, நல்லவங்களாவே இருப்பாங்க! அவங்களுக்கு எல்லாரும் மரியாதை குடுத்து வணங்குவாங்க! திருநாவுக்கரசர், மாணிக்கவாசகர், சுந்தரர், ஞானசம்பந்தர் போன்ற ஞானிகள், அடியார்கள் எல்லாம் அனுபவிக்காத கஷ்டமா? அதுனால நல்லவங்களுக்கும் கஷ்டம் வரும்; அவங்க அத ஜெயிச்சு மேல வந்துடுவாங்க!”