சிவ பூஜைக்குரிய மலர்களும்… தீரும் பிரச்சனைகளும்

செந்தாமரை – தனலாபம், வியாபார விருத்தி, ஆயுள் விருத்தி

மனோரஞ்சிதம், பாரிஜாதம் – பக்தி, தம்பதி ஒற்றுமை, ஆயுள்விருத்தி

வெண்தாமரை, நந்தியாவட்டை, மல்லிகை, இருவாட்சி – மனச்சஞ்சலம் நீங்கி, புத்திக்கூர்மை ஏற்படும். சகலகலாவிருத்தி.

மாசிப்பச்சை, மரிக்கொழுந்து – நல்ல விவேகம், சுகபோகங்கள், உறவினர் ஒற்றுமை உண்டாகும்.

மஞ்சள் அரளி, தங்க அரளி, செவ்வந்தி – கடன்நீங்கும், கன்னியருக்கு விவாகப்ராபதி ஏற்படும்.

செம்பருத்தி, அடுக்கு அரளி, தெத்திப்பூ – ஞானம் நல்கும், புகழ், தொழில் விருத்தி

நீலச்சங்கு – அவச்சொல், அபாண்டம், தரித்திரம் நீங்கும் அருளும் ஆயுளும் கிட்டும்.

வில்வம், கருந்துளசி, மகிழம்பூ – சங்கடங்கள் நீங்கி, சகலகாரியமும் கைகூடும்.

தாமரை, செண்பகம் ஆகியவற்றை மொட்டுகளாகவும் பூஜை செய்யலாம். ஏனையவை மலர்ந்திருக்க வேண்டும்.

குங்குமப்பூ தவிர மற்ற முள் உள்ள பூக்கள் பூஜைக்கு உகந்தவை அல்ல. கிளுவை, விளா, வெண்நொச்சி, மாவிலங்கை, வில்வம் ஆகியவை பஞ்ச வில்வங்களாகும்.

மாதப்பிறப்பு, சோமவாரம், அமாவாசை, பவுர்ணமி, சதுர்த்தி, சதுர்த்தசி, அஷ்டமி, நவமி நாள்களில் வில்வத்தை மரத்தில் இருந்து பறிக்கலாகாது.

Recommended For You

About the Author: webeditor