உக்ரைனிய மக்களுக்கு ஸ்வீடன் இராணுவம் சிறப்பு பயிற்சி வழங்க இருக்கும் நிலையில், இந்த பயிற்சியில் தற்போது பின்லாந்தும் தங்களை இணைத்து கொண்டுள்ளது.
ஸ்வீடன் ஆயுதப் படை நிபுணர்கள் உக்ரைனிய குடிமக்களுக்கு இராணுவத்தில் பணியாற்றுவதற்கான அடிப்படை பயிற்சிகளை வழங்குவதற்காக பிரித்தானியாவிற்கு வருகை தரவுள்ளனர்.
இந்த பயிற்சியானது கூட்டாளி நாடுகளுடன் இணைந்து உக்ரைனிய வீரர்களுக்கு, தங்கள் நாட்டின் மீதான ரஷ்ய படைகளின் தொடர்ச்சியான தாக்குதலை எதிர்கொள்ளும் இராணுவ அறிவுறுத்தலை வழங்குவதற்கான பிரித்தானியாவின் முன்முயற்சியின் ஒற்றை பகுதியாகும்.
பிரித்தானியாவின் இந்த முன்முயற்சியில் ஆகஸ்ட் 12 மற்றும் டிசம்பர் 32க்கு இடையில் 120 இராணுவ பயிற்றுனர்களை பிரித்தானியாவிற்கு அனுப்பும் என ஸ்வீடன் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து ஸ்வீடன் பாதுகாப்பு அமைச்சர் பீட்டர் ஹல்ட்க்விஸ்ட் தெரிவித்துள்ளதாவது,
உக்ரைனுக்கு எதிரான ரஷ்யாவின் போர் ஐந்து மாதங்களுக்கும் மேலாக நடந்து வருகிறது, மேலும் உலகின் பிற நாடுகள் இறையாண்மை மற்றும் சுயநிர்ணய உரிமைக்கான அதன் போராட்டத்தில் உக்ரைனுக்கு தொடர்ந்து ஆதரவளிப்பது மிகவும் முக்கியமானது எனத் தெரிவித்துள்ளார்.