முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ச தலைமையிலான ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் முக்கிய கலந்துரையாடலில் ஈடுபட்டுள்ளனர்.
இந்தச் சந்திப்பு மஹிந்த ராஜபக்சவின் கொழும்பு இல்லத்தில் நேற்று இடம்பெற்றது. இதன்போது பொருளாதார நெருக்கடி, வரவிருக்கும் உள்ளூராட்சி சபைத் தேர்தல் போன்ற விடயங்களுக்குப் பொதுஜன பெரமுன எவ்வாறு உதவ முடியும் என்பது தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டது.
அத்துடன், கட்சியை முன்னோக்கிக் கொண்டு செல்லும் வழிகள் தொடர்பிலும் இதன்போது கலந்துரையாடப்பட்டது என மஹிந்த ராஜபக்சவின் ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.
மேலும் இந்தச் சந்திப்பில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் முன்னாள் அமைச்சருமான பஸில் ராஜபக்சவும் கலந்துகொண்டார்.