குலதெய்வ வழிபாடு என்பது நம் முன்னோர்கள் வழிபட்டு நாம் வழிபட்டு நம்முடைய அடுத்த சந்ததியினரும் வழிபட வேண்டிய தெய்வம்.
இந்த தெய்வம் எப்போதும் நம்முடன் இருந்தால் எத்தகைய துன்பம் வந்தாலும் அதிலிருந்து நாம் மீண்டு வந்து விடலாம் என்று கூறப்படுகிறது.
இந்த வழிபாட்டை குலதெய்வம் இதுவென்று தெரிந்தவர்களும் செய்யலாம், தெரியாதவர்களும் செய்யலாம். இந்த வழிபாட்டை வெள்ளி, செவ்வாய், பௌர்ணமி போன்ற தினங்களில் தொடங்கலாம்.
எவ்வாறு செய்ய வேண்டும்
இந்த வழிபாட்டை செய்வதற்கு முதலில் விபூதியை ஒரு தட்டில் பரப்பி வைத்துக் கொள்ளுங்கள். அதில் இரண்டு ஏலக்காயை தூள் செய்து அந்த பவுடரை அதில் சேர்த்து விடுங்கள்.
அதன் பிறகு அதில் சிறிதளவு கஸ்தூரி மஞ்சள் அதனுடன் சிறிதளவு மரிக்கொழுந்தையும் சேர்த்து இதை ஒரு கெட்டியான மாவு பதத்திற்கு பிசைந்து வைத்துக் கொள்ள வேண்டும்.
விளக்கு ஏற்றி வழிபாடு
மஞ்சளை ஒரு கைப்பிடி எடுத்து அதில் பிள்ளையார் பிடித்து வைத்துக் கொள்ளுங்கள். உங்கள் பூஜை அறையில் விளக்கு ஏற்றி வைத்த பிறகு இந்த மஞ்சளை ஒரு தட்டில் வைத்த கொள்ளுங்கள்.
அந்த மஞ்சளை சுற்றி தயார் செய்து வைத்த விபூதி உருண்டைகளை மூன்றாக பிரித்து மஞ்சளை சுற்றி வைத்து விடுங்கள்.
குலதெய்வம் எதுவென்று தெரிந்து வழிபாடு செய்பவர்கள் என்ன நெய்வேத்தியம், மலர்கள் வைத்து வணங்குவீர்களோ வணங்கலாம்.
குலதெய்வம் தெரியாதவர்கள் எவ்வாறு வழிபட வேண்டும்
குலதெய்வமே தெரியாதவர்கள் நல்ல வாசனை மிக்க மலர்களை வைத்து ஒரு டம்ளர் பால் வைத்து வெற்றிலை, பாக்கு, பழத்துடன் தீபம் ஏற்றி வணங்கி எங்களுடன் நீங்கள் எப்போதும் இருந்து எங்களையும் எங்கள் குலத்தையும் காக்க வேண்டும் என்று வேண்டிக் கொள்ள வேண்டும்.
இந்த விபூதி, மஞ்சள் அனைத்தும் பூஜை அறையில் இருக்கட்டும். இதை தினமும் உங்கள் நெற்றியில் திலகமாக வைத்துக் கொள்ளுங்கள்.
அதே போல் இந்த விபூதி மஞ்சள் கலந்த தண்ணீரை உங்கள் வீட்டிலும் தெளித்து விடுங்கள். வருடம் ஒரு முறை இந்த வழிபாட்டை நம் வீட்டு பூஜை அறையில் செய்தாலே போதும். குலதெய்வம் நம்முடன் இருக்கும் என்று சொல்லப்படுகிறது.