பிரான்ஸ் கடற்கரையில் கரையொதுங்கும் பிளாஸ்டிக் பைகளை பார்த்து அதிர்ச்சி அடைந்த பொலிசார்

பிரான்ஸ் கடற்கரை ஒன்றில் வரிசையாக கரையொதுங்கிய பைகளை சோதனையிட்ட பொலிஸார், அவற்றில் ஏராளம் போதைப்பொருட்கள் இருப்பதைக் கண்டுபிடித்தனர்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை, (26) நார்மண்டியிலுள்ள Néville கடற்கரையில் பல பிளாஸ்டிக் பொட்டலங்கள் கரையொதுங்கின.

அவற்றை சோதனையிட்ட பொலிஸார், அவற்றில் 850 கிலோ கொக்கைன் என்னும் போதைப்பொருள் இருப்பதைக் கண்டுபிடித்தனர்.

இதனைத்தொடர்ந்து கடந்த புதன்கிழமை, (01-03-2023) Vicq-sur-Mer கடற்கரையில் மேலும் 6 பைகள் கரையொதுங்கின.

மொத்தத்தில் அந்த பைகளில் 2.3 டன் கொக்கைன் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

குறித்த போதைப்பொருள் தண்ணீர் புகாத வகையில் பிளாஸ்டிக் பைகளில் பேக் செய்யப்பட்டு பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்தது.
அந்த போதைப்பொருளின் மதிப்பு 150 மில்லியன் யூரோக்களாகும்.

அந்த போதைப்பொருள் பாக்கெட்கள் எப்படி அந்த கடற்கரைக்கு வந்தன, அவை எந்த நாட்டிலிருந்து வந்தவை என்பது உட்பட எந்த தகவலும் தெரியாத நிலையில், விமானம் மூலம் குறிப்பிட்ட பகுதியை அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனர்.

Recommended For You

About the Author: webeditor