உள்ளூராட்சி மன்றத் தேர்தல் ஒன்றும் பிற்போடப்பட்டவில்லை என முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற பிரதான கட்டடத்தொகுதியில் வைத்து ஊடகவியலாளர்களின் கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
மேலும் தெரிவிக்கையில், உள்ளூராட்சி மன்றத் தேர்தல் ஒன்றும் பிற்போடப்பட்டவில்லை. அத்துடன் தேர்தலை பிற்போட வேண்டிய தேவை ஏதும் தற்போது கிடையாது.
அதிகாரம் நாட்டு மக்களிடம்
உரிய நேரத்தில் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தியுள்ளோம். அத்துடன் கட்சி என்ற ரீதியில் தேர்தலுக்கு தயாராக உள்ளோம்.
நெருக்கடியான காலக்கட்டத்திலும் தேர்தல்கள் பல நடத்தப்பட்டுள்ளன. ஆகவே தேர்தலுக்கு அச்சமடைய தேவையில்லை.
அரசியல் தொடர்பான தீர்மானத்தை எடுக்கும் அதிகாரம் நாட்டு மக்களுக்கு உண்டு என்ற நிலைப்பாட்டில் எவ்வித மாற்றமும் கிடையாது என கூறியுள்ளார்.