இலங்கையின் கடற்பரப்பில் தீ விபத்திற்குள்ளான எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பலினால் ஏற்பட்ட பாதிப்புகளுக்கு நஷ்டஈடு பெறுவதற்கு சிங்கப்பூர் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்ய சட்டமா அதிபர் திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.
சமுத்திர பாதுகாப்பு அதிகார சபை
எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் விபத்தின் காரணமாக ஏற்பட்ட சுற்றுச்சூழல் பாதிப்புகளுக்காக 6 பில்லியன் டொலருக்கும் அதிகமான நட்டஈட்டைப் பெறுவதற்கு சமுத்திர பாதுகாப்பு அதிகார சபை எதிர்பார்த்துள்ளது.
சட்ட ரீதியான நடவடிக்கையை இம்மாதம் நடுப்பகுதியில் இருந்து ஆரம்பிப்பதற்கு எதிர்பார்க்கப்பட்டுள்ளது.
கடந்த 2021 ஆண்டு மே மாதம் 20 ஆம் திகதியன்று , இலங்கையின் கொழும்பு துறைமுகத்தின் கடல் பகுதியில் எக்ஸ்-பிரஸ் பேர்ல் கப்பல் தீப்பிடித்ததினால் இலங்கையின் கடல் வளத்திற்கு பெரும்பாதிப்பு ஏற்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.