ஐக்கிய நாடுகளின் அமைப்பின் முன்னாள் பொதுச்செயலாளர் பான் கீ மூன் இன்று இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளார்.
இந்த விஜயத்தின் போது அபிவிருத்தி மற்றும் காலநிலை மாற்றம் போன்ற விடயங்கள் தொடர்பில் சில உடன்படிக்கைகளில் பான் கீ மூன் கைச்சாத்திடுவார் என தெரிவிக்கப்படுகின்றது.
ரணில் விக்ரமசிங்கவை சந்தித்து பேச்சுவார்த்தை
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் காலநிலை மாற்றம் தொடர்பான விசேட பிரதிநிதி ருவான் விஜேவர்தன இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
பான் கீ மூன், நாளைய தினம் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளார்.
தென் கொரியாவின் உலக பசுமை வளர்ச்சி நிறுவனத்தின் தலைவராக பான் கீ மூன் தற்பொழுது கடமையாற்றி வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
காலநிலை மாற்றம் தொடர்பான பல்கலைக்கழகமொன்றை இலங்கையில் நிறுவுவது குறித்தும் பேச்சுவார்த்தை நடாத்தப்பட உள்ளது.