ஸ்லேவ் ஐலண்ட் ( Slave Island” )என்ற ஆங்கிலப் பெயரை உடனடியாக “கொம்பனி வீதி” என மாற்றுமாறு அதிகாரிகளுக்கு அறிவித்துள்ளதாக பிரதமர் தினேஷ் குணவர்தன இன்று தெரிவித்தார்.
75ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு இந்த பெயரை மாற்ற முடிவு செய்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.
பெயரை மாற்றுவதற்கு உரிய திருத்தங்களை மேற்கொள்ளுமாறு பொதுநிர்வாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
ஸ்லேவ் ஐலண்ட் என்ற பெயர் மூன்று மொழிகளில் (சிங்களம், தமிழ், ஆங்கிலம்) உச்சரிக்க வசதியாக மாற்றப்பட்டது.
இது தொடர்பில் தபால் மா அதிபர் மற்றும் மாநகர சபை ஆணையாளர் ஆகியோருக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது.
காலனித்துவ காலத்தில் ஸ்லேவ் ஐலண்ட் என்ற பெயர் பயன்படுத்தப்பட்டாலும், சிங்களம் மற்றும் தமிழ் மொழிகளில் ‘கொம்பனி வீதி ‘ என்ற பெயர் பயன்படுத்தப்பட்டது.