மக்கள் சிலர் தற்போதைய காலத்தில் சைவ உணவு சாப்பிடுவதில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
சைவ உணவு உண்ணும் போக்கு அதிகரித்து வருவதால் சிலர் மாடுகளிலிருந்து பெறப்படும் பாலை கைவிட நினைக்கின்றனர்.
முழுவதும் சைவமாக மாற வேண்டும் என நினைப்பவர்களுக்கு சோயா பால் சிறந்தது.
தயாரிப்பு
இந்த பால் சோயாபீன்களில் இருந்து தயாரிக்கப்படுகிறது இதில் பலவிதமான ஆரோக்கிய நன்மைகள் உள்ளது.
சத்துக்கள்
இந்த சோயா பால் குறைந்த கலோரிகள், அதிக புரதம், கால்சியம் மற்றும் பொட்டாசியத்தின் சிறந்த மூலமாக காணப்படுகிறது.
லாக்டோஸ் சகிப்புத்தன்மை உள்ளவர்களுக்கு சோயா பால் ஆரோக்கியமான பால் மாற்றாகும். சோயா பால் குடிப்பதால் நமது உடலுக்கு என்ன வகையான ஆரோக்கிய பலன்கள் கிடைக்கும்.
நன்மைகள்
எலும்பு
சோயா பால் குடிப்பதால் எலும்புகளின் ஆரோக்கியம் மேம்படுகிறது மற்றும் கால்சியத்தின் சிறந்த மூலமாக உள்ளது.
சோயா பால் தொடர்ந்து உட்கொள்வது ஆரம்பகால மாதவிடாய் காலத்தில் பெண்களுக்கு ஆஸ்டியோபோரோசிஸ் அபாயத்தைக் குறைக்கும் என்றும் பல ஆய்வுகள் காட்டுகிறது.
அமிலங்கள்
இதயத்திற்கு நன்மையளிக்கும் மோனோசாச்சுரேட்டட் மற்றும் பாலி அன்சாச்சுரேட்டட் கொழுப்பு அமிலங்கள் சோயா பாலில் உள்ளது.
இது பிளாஸ்மா லிப்பிட் அளவை மேம்படுத்த உதவுகிறது மற்றும் எதிர்காலத்தில் இதய நோய்களின் அபாயத்தைக் குறைக்கிறது.
சோயா பாலில் அதிகளவு புரதச்சத்து மற்றும் நார்ச்சத்து நிறைந்துள்ளதால் இது எடை இழப்புக்கு ஏற்ற சிறந்த பானமாக இருக்கிறது.
உடல் பருமன் மற்றும் உயர் இரத்த அழுத்தம் உள்ளவர்கள் சோயா பாலை குடித்து வர நல்ல பலனை பெறலாம்.
சோயா பால் தினமும் குடித்துவர உடலிலுள்ள கூடுதலான எடையை குறைக்கலாம்.