சிவக்கரந்தை மூலிகையின் மருத்துவ குணங்கள்

சிவக்கரந்தை

சிவக்கரந்தை மருத்துவ குணம் அதிகமுள்ள அரியவகை மூலிகைச் செடியாகும். இது நல்ல வாசனை கொண்டது. சிவகரந்தை கல்லீரல் நோய்கள், இருமல், மூலம், அஜீரணம், தோல் நோய்கள், காமாலை போன்றவற்றிற்கு சிறந்தது. நோய் எதிர்ப்பு திறனை அதிகரித்து அழற்சியைக் குறைக்கும்.

ரத்தத்தில் சர்க்கரையின் அளவை குறைக்கும். அத்துடன் இந்த மூலிகையை தினமும் சாப்பிட்டால் உடல் அழகு மேம்படும். இதற்கு கரந்தை, விஷ்ணுகிராந்தி போன்ற வேறு பல பெயர்களும் உண்டு.

கரந்தை வகைகள்

கரந்தை செடிகளில் சிவகரந்தை, கொட்டைக்கரந்தை, செங்கரந்தை, வெண்கரந்தை, கருங்கரந்தை எனப் பலவுண்டு. அதில் சிவகரந்தை வெள்ளை மற்றும் சிகப்பு என இரண்டு வகைப்படும்.

அதன் பூக்கள், மற்றும் காய்களின் நிறத்தை வைத்து சிகப்பு சிவகரந்தை, வெள்ளை சிவகரந்தை வகைபடுத்தபடுகிறது. இந்த மூலிகை அதிக வெப்பமுள்ள பகுதிகளில் மட்டுமே வளரக்கூடியது. இந்த மூலிகையின் தண்டு, இலை, பூ, வேர், விதை என அனைத்துமே மிகுந்த மருத்துவ குணம் கொண்டவை.

சிவகரந்தையை எப்படி உபயோகப்படுத்த வேண்டும்?

இந்த செடி பூக்கும் முன்பே கொண்டுவந்து நன்கு சுத்தம் செய்து நிழலில் உலர்த்தி அதன் வேரோடு எல்லா பாகங்களையும் இடித்துச் சூரணம் செய்து ஒரு புதிய மண் பாத்திரத்தில் போட்டு அதன் வாய் பகுதியை துணியை கொண்டு கட்டி வைத்துக் கொள்ள வேண்டும்.

இந்தச் சூரணத்தைத் தினம் இருவேளை காலையும், மாலையும் ஒரு மேஜைக்கரண்டி அளவு எடுத்து அதனுடன் சிறிது சர்க்கரை சேர்த்து சாப்பிட்டு வந்தால் நல்ல பசி ஏற்படும். மேலும் இது இரத்தத்திலுள்ள மாசுக்களை நீக்கி சொறி, சிரங்கு, கரப்பான் முதலிய தோல் நோய்கள் குணமாகும். இது விந்துணுவைப் பலப்படுத்தும்.

சிவகரந்தை மருத்துவப் பயன்கள்

1. சிவகரந்தையின் சாறு கல்லீரல், மண்ணீரல் சம்பந்தமான நோய்களை குணப்படுத்தும்.
2. சிவகரந்தை செடியின் வேரை கொண்டு செய்யப்படும் கஷாயம் மூலநோயை குணமாக்கும்.
3. சிவகரந்தை பொடி விந்தணுகளின் எண்ணிக்கையை அதிகரித்து ஆண்மையை அதிகரிக்கும்.
4. சிறு நீரகம் சம்பந்தமான நோய்களை நீக்கும்.
5. மஞ்சள் காமாலை நோயை முற்றிலும் குணப்படுத்தக் கூடியது.
6. சிவகரந்தை பொடி பசியை தூண்டும். மேலும் ரத்தத்தை சுத்திகரிக்கும்.
7. சிவகரந்தை பொடி உஷ்ணத்தால் ஏற்படும் வாந்தியை குணமாக்கும்.
8. கல்லீரலைப் பாதுகாக்கும் மற்றும் கிருமிகளைக் கொல்லும் சக்தி கொண்டது.
9. எல்லா வகையான ஜுரங்களையும் தீர்க்கும் வல்லமை கொண்டது.
10. நரம்பு மண்டலத்தை பலப்படுத்தி ஞாபகத் திறனை அதிகரிக்கும்.
11. சிவகரந்தை சாப்பிட்டு வந்தால் வாழ்நாள் அதிகரிக்கும்.
இந்த சிவகரந்தை மூலிகை சாப்பிடும் காலத்தில் மது மற்றும் புகையிலையை பயன்படுத்த கூடாது. உணவில் அதிகப்படியான காரம், மற்றும் புளிப்பை குறைக்கும்.

Recommended For You

About the Author: webeditor