தனது பெயர், போட்டோ, குரல், புகழ் உள்ளிட்டவற்றை தனது அனுமதியின்றி பயன்படுத்த கூடாது. மீறி பயன்படுத்தினால் உரிமையியல் மற்றும் குற்ற நடவடிக்கைகள் எடுக்கப்படும் என நடிகர் ரஜினிகாந்த் திடீரென்று இன்று அறிவித்துள்ளார். ரஜினிகாந்த் தரப்பில் அவரது வழக்கறிஞர் இளம்பாரதி பொது அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டாராக நடிகர் ரஜினிகாந்த் உள்ளார். இவர் தனது ஸ்டைலான நடிப்பால் குழந்தைகள் முதல் முதியவர்கர் வரை அனைவரையும் ஈர்த்து திரையுலகில் கொடிக்கட்டி பறந்து வருகிறார்.
இவருக்கு தமிழ்நாடு மட்டுமின்றி இந்தியா முழுவதிலும், உலக அளவிலும் ரசிகர்கள் பட்டாளம் உள்ளது. இந்நிலையில் தான் நடிகர் ரஜினிகாந்த் தரப்பில் இருந்து இன்று பொது அறிவிப்பு ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.
வழக்கறிஞர் மூலம் ரஜினி பொது அறிவிப்பு இந்த அறிவிப்பை நடிகர் ரஜினிகாந்த் தரப்பில் இருந்து அவரது வழக்கறிஞரான சுப்பையா இளம்பாரதி வெளியிட்டுள்ளார். இவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில் ரஜினிகாந்தின் பெயர், போட்டோ, குரல், புகழ் உள்ளிட்டவற்றை அனுமதியின்றி பயன்படுத்த கூடாது. மீறி பயன்படுத்தினால் உரிமையியல் மற்றும் குற்ற நடவடிக்கைகள் எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக சுப்பையான இளம்பாரதி வெளியிட்டுள்ள பொதுஅறிவிப்பில் கூறப்பட்டுள்ள அம்சங்கள் வருமாறு:
சூப்பர் ஸ்டாராக ரஜினிகாந்த் இந்த அறிவிப்பு என்பது சென்னை போயஸ்கார்டன் முகவரியில் வசித்த வரும் நடிகர் ரஜினிகாந்த் சார்பில் வெளியிடப்படுகிறது. ரஜினிகாந்த் இந்தியாவின் பல்வேறு மொழிப்படங்களில் நடித்து வருகிறார். இவரது ஸ்டைலான நடிப்பு மற்றும் நடத்தை ஆகியவற்றால் உலகளில் இருக்கும் பல லட்சக்கணக்கான ரசிகர்கள் அவரை சூப்பர் ஸ்டார் என அழைத்து வருகின்றனர். திரையுலகம் மற்றும் ரசிகர் பட்டாளத்திடம் அவரது மரியாதை என்பது நிகரற்றதாக உள்ளதை மறுக்க முடியாது.
அனுமதியின்றி பயன்பாடு இதனால் அவரது நற்பெயருக்கு அல்லது தனிப்பட்ட வகையில் ஏதேனும் சேதம் அல்லது விதிமீறல் நடந்தால் அதன் தாக்கல் பெரிய இழப்பை ஏற்படுத்தலாம். ரஜினிகாந்த் செலிபிரிட்டி அந்தஸ்தில் இருக்கிறார். இந்நிலையில் தான் பல உற்பத்தி நிறுவனங்கள் நடிகர் ரஜினிகாந்தின் குரல், போட்டோ, புகழ் உள்ளிட்டவற்றை அவரை அனுமதியின்றி பயன்படுத்தி வருவது தெரியவந்துள்ளது.
இது பொதுமக்களுக்கும், ரசிகர்களுக்கும் குழப்பத்தை ஏற்படுத்தும் வகையில் உள்ளது. இதனால் ரஜினிகாந்தின் பெயர், புகழ், குரல், போட்டோ உள்ளிட்டவற்றை அவரது அனுமதியின்றி பயன்படுத்த வேண்டாம் என அவர் கூறியுள்ளார். இதை மீறி வர்த்தக ரீதியில் பயன்படுத்தும் நபர்களுக்கு எதிராக வரும் நாட்களில் உரிமையியல் மற்றும் குற்ற நடவடிக்கைகள் எடுக்கப்படும்” என நடிகர் ரஜினிகாந்த் சார்பில் வெளியாகி உள்ள பொது அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.