பொலிசாருக்கு விதிக்கப்படும் தடை!

பாடசாலை மாணவர்களின் புத்தக பைகளை சோதனையிடும் நடவடிக்கையல் பொலிஸாரை ஈடுபடுத்தவேண்டாம் என ஆலோசனை வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனை மேல் மாகாணத்துக்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் தெரிவித்துள்ளார்.

புத்தக பைகளை சோதனையிட வேண்டாம்
களனி – சப்புகஸ்கந்த பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துக் கொண்டபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

அதன்படி எந்தவொரு பாடசாலை மாணவர்களினதும் புத்தக பைகளை சோதனையிட வேண்டாம் என பொலிஸ் மா அதிபர் அறிவுறுத்தல் விடுத்துள்ளார்.

அது பாடசாலைகளுக்கு உரித்தான பொறுப்பு என தெரிவித்த அவர், பாடசாலைகளில் போதைப்பொருள் தொடர்பான சோதனைகளை நிர்வாகம், பெற்றோர், பழைய மாணவர்கள் ஆகியோர் ஒன்றிணைந்து மேற்கொள்ள வேண்டும் எனவும் கூறினார்

Recommended For You

About the Author: webeditor