பிரான்ஸில் தற்போதைய எரிவாயு மற்றும் மின்சார கட்டண அதிகரிப்பு வரம்பு நடவடிக்கை நிறுத்தப்படவுள்ளது.
4 சதவீத விலை வரம்பு 15 சதவீதமாக உயர்த்தப்படவுள்ளதால் பெப்ரவரி மாதம் முதலாம் திகதி முதல் மின்சார கட்டணம் அதிகரிக்கப்படும்.
இந்நிலையில் மின்சாரம் மூலம் வீட்டை சூடுபடுத்தும் நபர்களுக்கு மாதம் 20 யூரோ வரை மின்சார கட்டணம் உயரும். மேலும் ஏனையவர்களுக்கான கட்டணம் 180 யூரோவாக இருக்கும்.
இதேவேளை பிரான்ஸின் எரிவாயு கட்டணம், சுமார் மூன்று மில்லியன் வீடுகளை பாதிக்கும் எனவும் ஜனவரி மாதம் முதலாம் திகதி முதல் உயரும் மற்றும் 15 சதவீதம் கட்டண அதிகரிப்பு வரம்பிடப்படும்.
இந்த விலை அதிகரிப்பு அனைத்து வீடுகள், அடுக்குமாடி குடியிருப்புகள், சிறிய வீடுகள், சிறு நிறுவனங்கள் உட்பட அனைத்தையும் பாதிக்கும் என தெரியவந்துள்ளது