கிளிநொச்சி வன ஜீவராசிகள் திணைக்களத்தினால் சட்டவிரோதமாக பதுக்கி வைக்கபட்டிருந்த ஆயுதங்கள் மீட்க்கப்பட்டுள்ளன!

கிளிநொச்சி மாவட்ட சுற்றுவட்ட காரியாலயம், வன ஜீவராசிகள் திணைக்களத்தினரால் கிளிநொச்சி அக்கராயன் ஜெயபுரம் பகுதியில் வனவிலங்குகளை வேட்டையாடுவதற்கு தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்த சட்டவிரோத ஆயுதங்கள் நேற்று முன்தினம்(02.01.2023) மீட்கப்பட்டுள்ளன.

கிளிநொச்சி மாவட்ட சுற்றுவட்ட காரியாலயம், வன ஜீவராசிகள் திணைக்களத்தினருக்கு குறித்த பகுதியில் வன விலங்குகளை வேட்டையாட பயன்படுத்தும் சட்டவிரோத ஆயுதங்கள் இருப்பதாக கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலை அடுத்து சுற்றிவளைப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

இரகசிய தகவல்
இதன்போது வனஜீவராசிகள் திணைக்களத்தினர் அங்கிருந்த சட்டவிரோத ஆயுதங்களை கைப்பற்றி இருந்தனர்.

இதேவேளை சட்டவிரோத ஆயுதங்களை உடமையில் வைத்திருந்த குற்றச்சாட்டில் அதே பகுதியை சேர்ந்த 62 மற்றும் 68 வயதேயான சந்தேகநபர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக கிளிநொச்சி மாவட்ட சுற்றுவட்ட காரியாலயம் வனஜீவராசிகள் திணைக்களத்தினர் தெரிவித்துள்ளனர்.

கைது செய்யப்பட இருவரையும் நேற்று (03-01-2023) கிளிநொச்சி மாவட்ட நீதவான் நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக வனஜீவராசிகள் திணைக்களத்தினர் தெரிவித்துள்ளனர்.

Recommended For You

About the Author: webeditor