சுற்றுலாத் துறை இராஜாங்க அமைச்சர் டயானா கமகே, தான் கஞ்சாவினால் செய்யப்பட்ட பற்பசையைத் தான் பல் துலக்க பயன்படுத்துவதாக தெரிவித்துள்ளார்.
கடந்த காலங்களில் சுற்றுலாத் துறை இராஜாங்க அமைச்சர் டயானா கமகே இலங்கையில் கஞ்சாவை பயிரிடுவது மற்றும் அதன் பயன்பாடு தொடர்பில் தெரிவித்து வந்த கருத்துக்கள் சர்ச்சைகளை ஏற்படுத்தியிருந்தன.
கஞ்சா ஒரு ஔடதம்
இந்த நிலையில், தற்போது மீண்டும் அது தொடர்பான கருத்துக்களை அவர் வெளியிட்டு வருகின்றார்.
கொழும்பில் நடைபெற்ற ஊடக சந்திப்பொன்றில் கலந்து கொண்ட இராஜாங்க அமைச்சர் டயானா கமகே மேலும் குறிப்பிடுகையில்,
கஞ்சா பலவிதமான பொருட்களை உற்பத்தி செய்யக்கூடிய ஒரு ஔடதம் என்று சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும், இலங்கையில் கஞ்சாவை பானமாக பயன்படுத்த தாம் ஒருபோதும் முன்மொழியவில்லை எனவும், அதனை ஏற்றுமதி பயிராக வளர்த்து இலங்கைக்கு டொலர்களை கொண்டு வருமாறும் அரசாங்கத்திற்கு பரிந்துரைத்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.