புற்றுநோய் வராமல் காக்கும் பாசிப்பயறு

நமது உடலுக்கு வலு மற்றும் ஊக்கம் தரும் பயிறு வகைகளில் பச்சைப் பயிறு முக்கிய இடம் பிடிக்கிறது. இவற்றில் வைட்டமின்கள்-ஏ, வைட்டமின்-பி, வைட்டமின்-சி மற்றும் வைட்டமின்-ஈ உள்ளது. மேலும், மெக்னீசியம், தாமிரம், நார்ச்சத்து, பொட்டாசியம், இரும்புச்சத்து போன்ற அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் உள்ளன.

இந்த அற்புதமான பயிறை நாம் ஊற வைத்து சாப்பிட்டு வந்தால் இன்னும் எண்ணற்ற ஆரோக்கிய நன்மைகள் கிடைக்கும். அவற்றில் சிலவற்றை இங்கு பார்க்கலாம். முளை கட்டிய பச்சைப் பயிற்றில் ஏகப்பட்ட அமினோ அமிலங்கள் மற்றும் பாலிபினால்கள் உள்ளன. இவை உடலில் புற்றுநோய் செல்கள் பரவாமல் தடுக்கிறது. எனவே இவற்றை தினமும் சாப்பிட்டு வந்தால் புற்றுநோய் வராமல் தடுக்கலாம்.

உயர் ரத்த அழுத்த பிரச்சினை உள்ளவர்கள் முளை கட்டிய பச்சைப் பயிறு உட்கொள்வது அதிக நன்மை பயக்கும். இவற்றில் சோடியம் குறைவு. இது கொழுப்பு அளவையும் ரத்த அழுத்தத்தையும் கட்டுக்குள் வைத்திருக்கும். முளை கட்டிய பச்சைப் பயிற்றை உட்கொள்வது செரிமானம், கல்லீரல், நோய் எதிர்ப்பு சக்தி, வயிறு தொடர்பான பிரச்சினைகளுக்கும் தீர்வாகிறது.

Recommended For You

About the Author: webeditor