அமெரிக்காவை தாக்கியுள்ள வெடிகுண்டு சூறாவளி (Bomb Cyclone) என்று அழைக்கப்படும் பனிப்புயல் காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
இடைவிடாது பனி பொழிவதால், வீதிகளில் பல அடி உயரத்திற்கு பனி குவிந்துள்ளது.
இந்நிலையில் அவற்றை அகற்றும் பணிகள் முன்னெடுக்கப்பட்டாலும், தொடர்ந்தும் பனிப்பொழிவு ஏற்படுவதால், மீட்பு பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன.
இதனால் மக்கள் வீடுகளில் இருந்து வெளியே வர முடியாமல் தவிக்கிறார்கள். குளிர், மின்தடை, போக்குவரத்து பிரச்சினை போன்றவற்றை மக்கள் சந்தித்து வருகிறார்கள்.
இந்த பனிப்புயலால் பலியானவர்களின் எண்ணிக்கை 60-ஆக உயர்ந்துள்ளது. மேலும் சிலர் காருக்குள்ளேயே உறைந்து உயிரிழந்துள்ளனர்.
அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ள நியூயார்க்கில் மீட்பு பணியில் இராணுவத்தினர் ஈடுபட்டுள்ளனர்.