இந்த ஆண்டில் மாத்திரம் தமிழகத்தில் வசிக்கும் சுமார் 3,000 அகதிகளுக்கு இலங்கை குடியுரிமை சான்றிதழ்கள் வழங்கப்பட்டுள்ளன.
இதனை சென்னையிலுள்ள இலங்கையின் துணை உயர்ஸ்தானிகரகம் வெளிப்படுத்தியுள்ளது.
இதன்படி கடந்த பெப்ரவரி 23 முதல் டிசம்பர் 15 வரை நடைபெற்ற சுமார் 20 சிறப்பு தூதரக முகாம்கள் மூலம் சான்றிதழ்கள் வழங்கப்பட்டதாக உயர்ஸ்தானிகரகம் குறிப்பிட்டுள்ளது.
அத்துடன் அக்டோபர் 2021 முதல் டிசம்பர் 2022 வரை நடத்தப்பட்ட சுமார் 25 சிறப்பு தூதரக முகாம்கள் மூலம், மாநிலத்தில் உள்ள புனர்வாழ்வு முகாம்களில் வசிக்கும் இலங்கையர்களுக்கு சுமார் 900 பிறப்புச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டதாக உயர்ஸ்தானிகரம் தெரிவித்துள்ளது.