பாபா வங்கா உயிரிழப்பதற்கு முன், இனிவரும் ஒவ்வொரு ஆண்டும் எப்படி இருக்கும் என பல்வேறு கணிப்புகளை சொல்லியுள்ளார்.இவரது கணிப்புகளில் 85% அளவுக்கு நடந்தேறியுள்ளதாக கூறப்படுகின்றது.
பல்கேரியா நாட்டை சேர்ந்தவர் பாபா வங்கா 12 வயதில் சூறாவளியில் சிக்கி கண்பார்வையை இழந்தார். பார்வை பறிபோனாலும் கடவுள் தனக்கு எதிர்காலத்தை கணிக்கும் சக்தியை வழங்கியுள்ளதாக பல விடயங்களை கணித்துள்ளார்.
அந்த வகையில், பிறக்கவிருக்கும் 2023 ஆம் ஆண்டு தொடர்பில் பாபா வங்கா கணித்துள்ளமை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ரஷ்யரான பாபா வங்கா இளவரசி டயானாவின் மரணம், செர்னோபில் அணுசக்தி பேரழிவு, 9/11 தாக்குதல்கள் மற்றும் அவரது சொந்த மரணம் உட்பட பல விடயங்களை முன்கூட்டியே கணித்திருந்ததுடன், 5079 ஆண்டு வரையிலான நிகழ்வுகளை அவர் கணித்துள்ளதாகவே கூறப்படுகின்றது.
அந்த வகையில், பிறக்கவிருக்கும் 2023 ஆம் ஆண்டு தொடர்பில் பாபா வங்கா நான்கு கணிப்புகளை பதிவு செய்துள்ளார்.
2023 ஆம் ஆண்டுக்கான கணிப்புகள்
அதில் உக்ரைனில் உயிரியல் ஆயுதம் பயன்படுத்தப்படும் எனவும், ரஷ்யா மட்டுமின்றி உலகின் பல முதன்மை நாடுகள் சோதனை முயற்சியாகவும் பாதுகாப்பு கருதியும் அதிக அளவில் பயன்படுத்தும் என்றும் அவர் கணித்துள்ளார்.
இரண்டாவதாக 2023ல் பூமி பயங்கரமான சூரிய புயலை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் எனவும் பாபா வங்கா பதிவு செய்துள்ளார். செயற்கைக்கோள் தகவல் தொடர்பு மற்றும் இணையம் கூட அத்தகைய தாக்குதல் காரணமாக பெருமளவு பாதிக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மூன்றாவதாக, 2023 முதல் இனி பெற்றோர்கள் தங்கள் விருப்பத்திற்கு ஏற்ப பிள்ளைகளை ஆய்வகங்களில் வடிவமைத்துக் கொள்வார்கள் எனவும், தோல் நிறம் மற்றும் அவர்களின் பண்புகள் வரையில் முடிவு செய்வார்கள் எனவும் பாபா வங்கா கணித்துள்ளார்.
நான்காவதாக பூமியின் சுற்றுப்பாதையில் ஒரு மாற்றம் நிகழும், இது சுற்றுச்சூழலில் பேரழிவு தரும் மாற்றத்திற்கு வழிவகுக்கும் எனவும் கணித்துள்ளார்.
3000 ஆண்டுகளுக்கு பின்னர் என்ன நடக்கும்
மேலும், உலகம் பேரழிவால் முடிவுக்கு வந்துவிடும் எனவும் இன்னும் 3000 ஆண்டுகளுக்கு பின்னர் என்ன நடக்கும் என்பதையும் கணித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. பாபா வங்கா இதுவரை கணித்துள்ள பல சம்பவங்கள் நடந்தேறியுள்ள நிலையில்,தற்போது இந்த தகவல் வெளியாகியுள்ளது.
2046 காலகட்டத்திற்கு பின்னர் உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்து கொண்டு மக்கள் நூறு ஆண்டுகளுக்கும் மேலாக உயிருடன் வாழ்வார்கள் எனவும் பாபா வங்கா கணித்துள்ளார்.
2100க்கு பின்னர் பூமியில் இரவு நேரம் என்பதே இருக்காது எனவும், இரவை பகலாக்கும் செயற்கை சூரியன் உருவாக்கப்படும் எனவும் அவர் கணித்துள்ளார்.
பாபா வங்காவின் பிரபலமான கணிப்புகள்
பாபா வங்கா உலக அழிவைப் பற்றியும் கணித்துள்ளார். உலகம் 5079 ஆம் ஆண்டில் அழியும்.
வெட்டுக்கிளிகள் 2022 ஆம் ஆண்டில் இந்தியாவைத் தாக்கக்கூடும். இது தவிர, பஞ்சம் போன்ற பேரிடர் பிரச்சினையையும் நாடு சந்திக்க நேரிடலாம்.
பூமியின் சுற்றுப்பாதை 2023 ஆம் ஆண்டு மாறும். அதே நேரத்தில், விண்வெளி வீரர்கள் 2028 ஆம் ஆண்டில் சுக்ரன் கிரகத்தை அடைவார்கள்.
2046-ம் ஆண்டில், மனிதர்கள் 100 வயது வரை வாழத் தொடங்குவார்கள். உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையில் பெரும் முன்னேற்றம் ஏற்பட்டு, மனிதர்கள் நீண்ட காலம் வாழ்வார்கள்.
அமெரிக்காவில் உள்ள வர்த்தக கோபுரங்கள் மீதான் தாக்குதல். அமெரிக்காவின் 44வது ஜனாதிபதியாக ஒரு கருப்பினத்தவர் பதவி ஏற்பார்.
2016ம் ஆண்டு ISIS என்னும் இஸ்லாமிய தீவிரவாத இயக்கம் வலிமை பெறும். ஐரோப்பாவில் இருந்து இங்கிலாந்து விலகும்.
பாபா வங்கா 2022 ஆம் ஆண்டு குறித்த சில கணிப்புகளில், இதுவரை இரண்டு கணிப்புகள் உண்மையாகி உள்ளது.
இதில் முதலாவதாக அவுஸ்திரேலியாவின் சில பகுதிகளில் கடுமையான வெள்ளப்பெருக்கு ஏற்படும் என்று கணிக்கப்பட்ட நிலையில் அவை உண்மையாகியுள்ளது.