யாழ் மருதங்கேணி கடற்பரப்பில் பயணிகளுடன் தத்தளித்த படகு ஒன்று மீட்பு!

யாழ்ப்பாணம் – மருதங்கேணி, கட்டைக்காடு கடற்பரப்பில் தத்தளித்த படகில் இருந்த சுமார் 130 பேரும் கடற்படையினரால் மீட்கப்பட்டு காங்கேசன்துறை கடற்படை தளத்திற்கு அழைத்துவரப்பட்டுள்ளனர்.

இவர்கள் மியன்மார் நாட்டை சேர்ந்தவர்கள் எனவும் முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது

முதலாம் இணைப்பு
வடமராட்சிக் கிழக்கு கடலில் படகு ஒன்று பழுதடைந்த நிலையில் கரையொதுங்குவதாக தகவல் வெளியாகியுள்ளது.

படகில் நூற்றுக்கு மேற்பட்டவர்கள் இருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது. அவர்களை மீட்பதற்கான நடவடிக்கைகள் இடம்பெற்றுக் கொண்டிருப்பதாகவும், சற்று முன்னர் தகவல்கள் வெளியாகியுள்ளது.

இதனை அவதானித்த வடமராட்சி- கட்டக்காட்டு கடற்றொழிலாளர்கள் கடற்படைக்கு அறிவித்த நிலையில், கடற்படையினர் மீட்பு நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளனர்.

பிற நாட்டைச் சேர்ந்தவர்களே இவ்வனர்த்ததில் சிக்கியிருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

முதலாம் இணைப்பு
யாழ்ப்பாணம்- மருதங்கேணி பொலிஸ் பிரிவிட்குட்பட்ட பகுதியில் படகு ஒன்று சேதமடைந்த நிலையில் கரையொதுங்குவதாக தகவல் வெளியாகியுள்ளது.

சம்பவம் தொடர்பில் இலங்கை கடற்படையினர் விரைந்து சம்பவ இடத்திற்கு செல்வதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

படகில் பெண்கள், மற்றும் ஆண்கள் இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில் அவர்களுக்கு தேவையான மருத்துவ உதவிகளை வழங்கவும் கடற்படையினர் விரைந்து நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

நம்பத்தகுந்த வட்டாரங்கள்களை மேற்கோள் காட்டி இந்த செய்தி வெளியிடப்பட்டுள்ளது.

Recommended For You

About the Author: webeditor