பிரான்ஸ் தற்போது சந்தித்துள்ள பணவீக்கம் காரணமாக 2024 ஆம் ஆண்டு பரிசில் இடம்பெற உள்ள ஒலிம்பிக் போட்டிகளுக்கான ஏற்பாடுகளில் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.
2024 ஆம் ஆண்டுக்கான ஒலிம்பிக் போட்டிகள் பரிசில் இடம்பெற உள்ளமை அனைவரும் அறிந்ததே. இதற்கான ஏற்பாடுகள் துரித வேகத்தில் இடம்பெற்று வருகிறது. தற்போது பிரான்ஸ் சந்தித்துள்ள பணவீக்கம் காரணமாக இந்த பணிகளில் பின்னடைவு ஏற்பட்டுள்ளதாக தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளது.
பணிகள் நிறுத்தப்படவில்லை என்றபோதும், விரைவில் இதற்குரிய தீர்வு ஒன்றை கண்டறியவேண்டும் என ஒலிம்பிக் அமைப்பின் தலைவர் தெரிவித்துள்ளார்.
“இதுதொடர்பாக நாம் தீவிரமாக கலந்துரையாடிவருகிறோம். நாம் விரைவில் அதற்குரிய தீர்வினை கண்டுபிடித்துவிடுவோம்!” என ஒலிம்பிக் அமைப்பின் தலைவர் Thomas Bach தெரிவித்தார்.