இணையத்தில் விற்ப்பனைக்கு விடப்பட்டுள்ள வாட்ஸ் அப் பயனாளர்களின் தொலைபேசி இலக்கங்கள்

உலகம் முழுவதும் 2.20 பில்லியனுக்கும் அதிகமானோர் வாட்ஸ் அப்பை செயலியை பயன்படுத்தும் நிலையில் அதிர்ச்சி தகவலொன்று வெளியாகியுள்ளது.

இதற்கமைய, 50 கோடி வாட்ஸ்அப் பயனாளர்களின் தொலைபேசி எண்கள் இணையத்தில் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சைபர்நியூஸ் அறிக்கையின்படி ஹேக்கர் வெளியிட்டுள்ள விளம்பரத்தில், 2022 தரவுகளின் அடிப்படையிலான சுமார் 48.7 கோடி வாட்ஸ்அப் பயனர் தொலைபேசி எண்கள் விற்பனைக்கு தயாராக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வாட்ஸ் அப் பயனாளர்களுக்கான அறிவிப்பு
இந்த தரவுகளில் அமெரிக்கா, இங்கிலாந்து, எகிப்து, இத்தாலி, சவுதி அரேபியா மற்றும் இந்தியா உட்பட 84 நாடுகளைச் சேர்ந்த வாட்ஸ்அப் பயனர்களின் எண்களில் உள்ளதாக கூறப்படுகின்றது.

அதில் 32 அமெரிக்க மில்லியன் மக்களின் தரவுத்தொகுப்பை 7,000 டொலருக்கு (சுமார் ரூ.5,71,690) விற்பனை செய்வதாக ஹேக்கர் தெரிவித்துள்ளார்.

இருப்பினும், தற்போது வரை சைபர்நியூஸ் அறிக்கைக்கு மெட்டா நிறுவனம் எந்த விளக்கத்தையும் அளிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Recommended For You

About the Author: webeditor