நீரிழிவு நோயாளர்கள் இளநீர் குடிக்கலாமா?

இளநீர் குடிப்பது அனைவரினது ஆரோக்கியத்திற்கும் நன்மை பயக்கும் ஒன்றாகும்.இது ஒரு இயற்கை பானம் என்பதோடு இது டெட்ராபேக் அல்லது பாட்டில்களில் கிடைக்கும் சாறுகள் மற்றும் குளிர்பானங்களை விட பல மடங்கு சிறந்தது.

கிராமங்கள் முதல் நகரங்கள் வரை ஆரோக்கியத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கும் பலர் இதனை தொடர்ந்து பருகி வருகின்றனர்.

உணவியல் நிபுணர் இது குறித்து கூறுகையில் பாலை விட இளநீரில் அதிக ஊட்டச்சத்துக்கள் காணப்படுகின்றன.

சத்துக்கள்

இதில் உள்ள கொழுப்பின் அளவும் மிகக் குறைவு அதே போல் இதனை தொடர்ந்து உட்கொள்பவர்களுக்கு பொட்டாசியம், சோடியம், கால்சியம், மெக்னீசியம் மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் போன்றவை உடலுக்கு கிடைக்கின்றன.

இளநீர் குடிப்பதால் உடலில் உள்ள நச்சுகள் வெளியேறி பல நோய்களின் அபாயம் தவிர்க்கப்படுகிறது.

நீரிழிவு நோயாளிகள் இளநீரை குடிக்கலாம். இந்த இயற்கை பானத்தை தினமும் கூட குடிக்கலாம். இது அவர்களின் ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை பயக்கும்.

ஏனெனில் இது இரத்த சர்க்கரை அளவை குறைக்க உதவுகிறது.அதன் கிளைசெமிக் இன்டெக்ஸ் (GI) குறைவாக உள்ளது என்று உணவு நிபுணர் கூறியுள்ளார்.

இளநீரில் உள்ள மெக்னீசியம் இன்சுலின் உணர்திறனை மேம்படுத்த உதவுகிறது. இளநீரைக் குடிப்பதால் உடலில் நீர்ச்சத்து அதிகரிப்பதுடன் அற்புத சக்தியும் கிடைக்கும்.

நீரிழிவு நோயாளிகள் இளநீரையும் அதனுள் இருக்கும் பதமான வழுக்கையையும் சாப்பிடலாம். ஏனெனில் இது வளர்சிதை மாற்றத்தை மேம்படுத்த உதவும் பல ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளது.

மேலும் வழுக்கையை சாப்பிடுவது உடல் கொழுப்பைக் குறைக்கிறது. ஏனெனில் அதில் நல்ல கொலஸ்ட்ரால் உள்ளது மற்றும் இது இதய நோய்களின் அபாயத்தை குறைக்க உதவுகிறது.

Recommended For You

About the Author: webeditor