சமையலில் மிக முக்கிய இடத்தைப் பிடித்துள்ள கொத்தமல்லி, மிகுந்த மருத்துவ குணங்களை கொண்டுள்ளது. இதனுடைய விதை மற்றும் இலை என அனைத்துமே உண்ணக் கூடியவை தான்.
சுவைக்காக மட்டுமின்றி, கொத்தமல்லியை நமது உடல் ஆரோக்கியத்திற்காகவும் பயன்படுத்துகிறோம். அதிலும் குறிப்பாக, கொத்தமல்லி விதைகள் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மிகுந்த நன்மையை அளிக்கிறது.
நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்த
அமெரிக்க நாட்டின் தென் புளோரிடாவில் அமைந்திருக்கும் ஃப்ளோரிடியன் ரிசர்ச் இன்ஸ்டிடியூட் ஆய்வு ஒன்றை நடத்தியது. அந்த ஆய்வின் அடிப்படையில் கொத்தமல்லி பல விதங்களில் நம் உடல் நலத்திற்கு ஆரோக்கியத்தை அள்ளித் தருகிறது என கண்டறியப்பட்டுள்ளது.
இந்த ஆய்வின் முடிவில் கொத்தமல்லியின் மிக முக்கிய பலன்கள் இங்கே பட்டியலிடப்பட்டுள்ளது. கொத்தமல்லியின் நன்மைகள் நீரிழிவு நோயாளிகளின் இரத்த குளுக்கோஸ் அளவைக் குறைப்பதில் கொத்தமல்லி விதைகள் பெரும்பங்கு வகிக்கிறது என நம்பப்படுகிறது.
இது இன்சுலின் செயல்பாட்டை பராமரிக்க உதவி புரிவதால், இரத்த சர்க்கரை அளவை குறைப்பதில் மிகுந்த உதவியாக இருக்கிறது.
ஆய்வு முடிவு
அமெரிக்காவில் உள்ள தேசிய மருத்துவ நூலகத்தில் வெளியிடப்பட்டுள்ள ஒரு ஆய்வு முடிவுகளின்படி, ஸ்ட்ரெப்டோசோடோசின் தூண்டப்பட்ட நீரிழிவு, எலிகளில் கணைய பீட்டா செல்களில் இருந்து இன்சுலின் வெளிப்பாட்டைக் கட்டுப்படுத்தி அடக்குவதில் கொத்தமல்லி விதைகள் மிகவும் பயனுள்ளதாக இருந்தன எனத் தெரிய வந்துள்ளது.
கொத்தமல்லி விதைகளில் உள்ள எத்தனால், இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவைக் குறைக்கிறது.
கணையத்தில் உள்ள பீட்டா செல்களில் இருந்து, இன்சுலின் வெளியீட்டை அதிகரிக்க கொத்தமல்லி உதவுகிறது. அத்துடன் கொத்தமல்லி விதைகள் செரிமானத்தை மேம்படுத்துவதில் மிகவும் உதவியாக உள்ளது.
மேலும், உங்கள் இரத்த சர்க்கரையின் அளவை சீராக வைத்திருக்க உதவுகிறது.