ஆஸ்திரேலியாவில் இடம்பெற்று வரும் டி20 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் இன்றைய போட்டியில் இந்திய அணி 05 ஓட்டங்கள் வித்தியாசத்தில் பங்களாதேஷ் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றுள்ளது.
போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற பங்களாதேஷ் அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்தது.
இதற்கமைய, முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 6 விக்கெட்டுக்களை இழந்து 184 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.
இந்த நிலையில், 185 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி பங்களாதேஷ் அணி துடுப்பெடுத்தாட ஆரம்பித்தது.
அந்த அணி 7 ஓவர்கள் நிறைவில் 66 ஓட்டங்களை பெற்றிருந்த நிலையில் மழைக்குறுக்கிட்டது. இதனால் டக்வத் லூயிஸ் முறைமைக்கு அமைய போட்டி 16 ஓவர்களாக மட்டுப்படுத்தப்பட்டது.
இதனடிப்படையில், பங்களாதேஷ் அணிக்கு 151 ஓட்டங்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.
வெற்றி இலக்கை நோக்கி துடுப்பாடிய பங்களாதேஷ் அணி நிர்ணயிக்கப்பட்ட 16 ஓவர்கள் நிறைவில் 6 விக்கெட்டுக்களை இழந்து 145 ஓட்டங்களை மாத்திரம் பெற்று தோல்வியை தழுவியது.
இந்த வெற்றியை தொடர்ந்து இந்திய அணி தனது அறையிறுதி வாய்ப்பை உறுதி செய்துள்ளது.