மது அருந்துபவர்களில் பலர் தினமும் பீர் அருந்துகின்றனர்.அதில் ஆல்கஹால் அளவு மிகவும் குறைவு என்றும் தினசரி பீர் குடிப்பது உடலுக்கு நன்மை செய்யும் என்றும் சிலர் கூறி வருகின்றனர்.
சிலர் அன்றாடம் விரும்பும் பானங்களில் ஒன்று பீர்.விலை மலிவானது என்பதுடன் அனைத்து மதுபான கடையிலும் சுலபமாகக் கிடைக்கும். உடலுக்கு அதிக பாதிப்பு ஏற்படுத்தாது என்று நினைத்து, மக்கள் இந்த பானத்தை தேர்வு செய்கிறார்கள்.
மிதமான பீன் நுகர்வு ஆரோக்கியத்திற்கு நல்லது ஆனால் தினசரி குடிப்பதால் பீர் பல கடுமையான நோய்கள் ஏற்பட வழிவகுக்கும்.
ஆபத்துக்கள்
பீரில் கலோரிகள் அதிகம் உள்ளன. தொடர்ந்து பீர் அருந்துவது உடல் எடை அதிகரிக்க வழிவகுக்கும். தொடர்ந்து பீர் குடிப்பவர்களுக்கு தொப்பை ஏற்படும் என்று கூறப்படுகின்றது.
அதிகப்படியான பீர் குடிப்பவர்களின் உடலில் இன்சுலின் சுரப்பில் ஏற்றத்தாழ்வு ஏற்படுகிறது. இதனால் நீரிழிவு நோயின் அபாயம் அதிகமாகும்.
இரத்த அழுத்தத்தில் மாறுபாடு ஏற்படுவது இயல்பானதாக இருக்கலாம். ஆனால், சில நேரங்களில் சில குறிப்பிட்ட வகையான உணவுகள் அல்லது பானங்கள் தொடர்ந்து உட்கொள்வது உயர் இரத்த அழுத்தம் ஏற்பட வழிவகுக்கும்.
ஆல்கஹால் ஆயுளைக் குறைக்கும் என்று ஆராய்ச்சி மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது.
ஆல்கஹால் அதிகம் உள்ள மதுபானத்தை குடிக்காவிட்டாலும், அதிக அளவில் பீர் குடிப்பது ஆரோக்கியத்தில் அதே தாக்கத்தை ஏற்படுத்தும்.