சூரியனின் வினோத புகைப்படத்தை வெளியிட்டுள்ள நாசா

சூரியன் சிரிப்பது போன்ற வினோத புகைப்படத்தை நாசா வெளியிட்டுள்ளது.

நாசாவின் சன் டுவிட்டர் கணக்கில் பகிரபட்டு உள்ள ஒரு படத்தில் சூரியன் சிரிப்பது போன்ற படம் இடம்பெற்றுள்ளது.

இரண்டு கரோனல் துளைகள் மகிழ்ச்சியான கண்கள் போல் தோன்றுகின்றது.இது சூரிய மேற்பரப்பில் உள்ள கரோனல் துளைகள் சரியான இடங்களில் தற்செயலாக உருவாகி,சூரியன் சிரிப்பது போல் காட்சியளிக்கின்றது.

இரண்டு கரோனல் துளைகள் மகிழ்ச்சியான கண்கள் போல் தோன்றுகின்றது. மூன்றாவது துளை அதன் கீழே மையத்தில் ஒரு பரந்த புன்னகை போன்ற குழியை உருவாக்குகின்றது.

புற ஊதா ஒளியில் பார்த்தால், சூரியனில் உள்ள இந்த இருண்ட திட்டுகள் கரோனல் துளைகள் என்று அழைக்கப்படுகின்றன.

மேலும் அவை வேகமான சூரியக் காற்று விண்வெளியில் வெளியேறும் பகுதிகளாகும் என நாசா விளக்கியுள்ளது.

Recommended For You

About the Author: webeditor