தானியங்கி போர்க்கப்பலுடன் மத்திய கிழக்கு நோக்கி நகரும் அமெரிக்க கடற்படைப் பிரிவு!
அமெரிக்க கடற்படை வரலாற்றில் முன்னெப்போதும் இல்லாத வகையில், மனிதர்கள் எவருமின்றி தானியங்கியாக இயங்கும்
போர்க்கப்பலுடன் கூடிய வானூர்தி தாங்கி போர்க்கப்பல் குழு (Carrier Strike Group) மத்திய கிழக்கு பிராந்தியத்தை நோக்கி பயணத்தை ஆரம்பித்துள்ளது.
‘யூ.எஸ்.எஸ் தியோடர் ரூஸ்வெல்ட்’ (USS Theodore Roosevelt) தலைமையிலான கடற்படைப் பிரிவிலேயே, முதன்முறையாக ‘சீஹாக்’ (Seahawk) என்ற இந்த ஆளில்லா தானியங்கி ரோபோ கப்பல் இணைக்கப்பட்டுள்ளது.
முக்கிய சிறப்பம்சங்கள்:
குழுவினர் எவருமின்றி கடலில் பல மாதங்கள் தொடர்ந்து பயணிக்கும் நவீன கட்டமைப்பு.
ஜி.பி.எஸ் (GPS) சமிக்ஞை இணைப்பு இல்லாத சூழலிலும் திசைமாறாது சுயமாக இயங்கும் திறன்.
அமெரிக்க கடற்படையின் தாக்குதல் படைப்பிரிவொன்றில் ஆளில்லா தானியங்கிக் கப்பல் முழுமையாக இணைக்கப்பட்டு களமிறக்கப்படுவது இதுவே முதல் நிகழ்வாகும்.
அமெரிக்க கடற்படை ‘கோஸ்ட் ஃப்ளீட் ஓவர்லார்ட்’ (Ghost Fleet Overlord) திட்டத்தின் கீழ் ஆளில்லா நடுத்தர போர்க்கலங்களை (Medium Unmanned Surface Vehicles – MUSV) பரிசோதித்து வருகின்றது.
இதில் உள்ள ‘சீஹாக்’ (Sea Hawk) மற்றும் ‘சீ ஹண்டர்’ (Sea Hunter) போன்ற கப்பல்கள் நீண்ட தூர ரோந்து, கண்காணிப்பு மற்றும் தொடர்பாடல் உதவிகளுக்காக வடிவமைக்கப்பட்டவை ஆகும்.

