பாரிஸில் மெட்ரோ ரயில் பாதைக்கு அடியில் இயங்கிய அகதிகள் முகாம் அகற்றம்!

பாரிஸில் மெட்ரோ ரயில் பாதைக்கு அடியில் இயங்கிய அகதிகள் முகாம் அகற்றம்!

400 பேருக்கு அதிகனோர் வெளியேற்றம்

பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் மெட்ரோ ரயில் பாதை 2-ன் கீழ் அமைக்கப்பட்டிருந்த அகதிகளின் தற்காலிக முகாம்களை பொலிஸார் அதிரடியாக அகற்றியுள்ளனர்.

 

Stalingrad மற்றும் La Chapelle ரயில் நிலையங்களுக்கு இடையே பல வாரங்களாக இயங்கி வந்த இந்த முகாம் புதன்கிழமை காலையில் அகற்றப்பட்டது.

 

சாலையோரங்களில் மனிதநேயமற்ற முறையில் மக்கள் தங்குவதைத் தவிர்க்கவே இந்நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும், 400 பேருக்கு மாற்றுத் தங்குமிடம் வழங்கப்படும் என்றும் பாரிஸ் மேயர் தெரிவித்துள்ளார்.

 

பொலிஸ் தலைமையகம் மற்றும் பிராந்திய நிர்வாகத்துடன் இணைந்து மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை இது என அரசுத் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

 

எனினும், அரசினுடைய இந்தக் கூற்றைப் பொய் என மறுத்துள்ள Utopia 56 என்ற மனித உரிமைகள் அமைப்பு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

 

புல்டோசர்கள் மூலம் கூடாரங்கள் அப்புறப்படுத்தப்படுவதைக் சுட்டிக்காட்டி, இது மாற்றுத் தங்குமிட நடவடிக்கை அல்ல மாறாக “சமூகத் தூய்மைப்படுத்தல்” என குற்றம் சாட்டியுள்ளது.

 

பொலிஸார் வலுக்கட்டாயமாக அகதிகளை வெளியேற்றியதால், மொழிபெயர்ப்பாளர்கள் மூலம் அவர்களுக்குத் தேவையான உதவிகளை வழங்க முடியாமல் போனதாகத் தொண்டு நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.

 

அகற்றப்பட்ட பகுதிகளில் பலத்த பொலிஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ள நிலையில், பாரிஸில் அகதிகள் விவகாரம் தொடர்பாக மீண்டும் சர்ச்சை வெடித்தூளளது.

Recommended For You

About the Author: admin