போதைப் பாவனையால் பாதிக்கப்பட்டவர்களுக்கான மறுவாழ்வு இல்லம் ஒன்றை வடமாகாணத்தில் நிறுவுதல் வேண்டும் என பவ்ரல் அமைப்பின் மாற்றத்திற்கான பாதை கற்கை நெறியின் யாழ். மாவட்ட பெண்கள் குழு நடத்தின ” போதையினால் பாதை மாறும் இளையோரை நல்வழிப்படுத்தி நற்பிரஜைகளை உருவாக்குவோம் ” போதை ஒழிப்பு விழிப்புணர்வு செயற்பாட்டு நிகழ்வு யாழ். திருநெல்வேலி முத்துத்தம்பி மகா வித்தியாலயத்தில் இடம்பெற்றது. இதன்போதே பவ்ரல் அமைப்பின் மாற்றத்திற்கான பாதை கற்கை நெறியின் யாழ். மாவட்ட பெண்கள் குழுவினர், கையளித்த மகஜரில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
கிராம மட்டங்களில் மாதாந்தம் விழிப்புணர்வு செயற்பாடுகளை செய்தல்
போதைப் பாவனையால் பாதிக்கப்பட்டவர்களுக்கான மறுவாழ்வு இல்லம் ஒன்றை வடமாகாணத்தில் நிறுவுதல் வேண்டும்
சட்டம் ஒழுங்கை நிலைநாட்ட காவற்துறை இரவு நேர ரோந்துகளை கிரமமாக நடத்துதல்
போதைப்பொருள் விற்பனை செய்பவர் குற்றவாளியாக இனம் காணப்பட்டால் கடுமையான தண்டனை வழங்கல்
நிரந்தர தொழில் அற்ற குடும்பங்களுக்கான தொழில் பயிற்சிகளை வழங்கல்
பாடசாலை கல்வியோடு தொழிற்கல்வியை
பயிற்றுவித்தல்
பாடசாலை மாணவர்களுக்கான இணைபாட விதான செயற்பாடுகளை ஊக்குவித்தல் ( விளையாட்டு, சாரணியம் மற்றும் இதர கழக செயற்பாடுகள்)
பிரதேச விளையாட்டு மைதாங்களின் பாவனையினை அதிகரிப்பதற்கான நடவடிக்கைகள்.
பிரதேச விளையாட்டு கழகங்களை ஊக்கப்படுத்தி, பயிற்சிகள் போட்டிகளை நடாத்துத்தல்.
பிரதேச நூலகங்களின் செயற்பாடுகளை பாடசாலை நோக்கி நகர்த்துதல்; நூலகப் பாவனையினை அதிகரித்தல்.
சனசமூக நிலையங்களின் செயற்பாடுகளை அதிகரிக்க நடவடிக்கை எடுத்தல்: மீள் உயிர்ப்பித்தல் போன்ற விடயங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.