சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட பாகங்களைப் பயன்படுத்தி பொருத்தப்பட்டதாக கூறப்படும் நான்கு அதியுயர் திறன் கொண்ட மோட்டார் சைக்கிள்கள் உட்பட 16 மோட்டார் சைக்கிள்களை பண்டாரகம பொலிஸார் கைப்பற்றியுள்ளனர். குறித்த மோட்டார் சைக்கிள் சாரதிகள் இந்த மோட்டார் சைக்கிள்களை அதிக சத்தங்களை எழுப்பி ஓட்டிச் சென்றுள்ளனர்.... Read more »
மாணவி ஒருவரை தகாத முறைக்கு உட்படுத்திய ஆசிரியர் ஒருவரை மாத்தறை பொலிஸ் நிலையத்தின் சிறுவர் மற்றும் மகளிர் பிரிவு அதிகாரிகள் கைது செய்துள்ளனர். தெவினுவர பிரதேசத்தைச் சேர்ந்த ஆசிரியர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்படடுள்ளார். இந்த ஆசிரியர் ஆங்கில பாட ஆசிரியராக கடமையாற்றி வருகின்றார்... Read more »
பாலியல் வன்கொடுமைக்குள்ளாகி படுகொலை செய்யப்பட்ட வித்தியாவின் 10 ஆவது ஆண்டு நினைவு மற்றும் இலங்கையில் தொடரும் பாலியல் வன்கொடுமைகளை கண்டித்து யாழ்ப்பாணத்தில் போராட்டம் ஒன்று இன்று முன்னெடுக்கப்பட்டது. யாழ் பிரதான பேருந்து நிலையம் முன்பாக இன்று காலை இக் கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. வல்லமை... Read more »
யாழ்ப்பாணத்தில் தனது 6 வயது பெண் பிள்ளைக்கு உணவில் கிருமிநாசினியை கலந்து ஊட்டிய தந்தையொருவர் தலைமறைவாகியுள்ளார். அந்த பிள்ளை தற்போது யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவருகின்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. யாழில் தென்னிலங்கை சுற்றுலா பயணிகளின் பேருந்து மீது தாக்குதல்யாழில் தென்னிலங்கை சுற்றுலா பயணிகளின் பேருந்து... Read more »
இந்திய அணி அடுத்த மாதம் இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. இந்த தொடருக்கான இந்திய அணி ரோகித் சர்மா தலைமையில் அறிவிக்கப்படலாம் என எதிர்பார்த்த நிலையில், கடந்த 7ம் திகதி டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக... Read more »
பிரெஞ்சு கடற்படைக் கப்பலான ‘BEAUTEMPS BEAUPRE’ நேற்று (9) நல்லெண்ணப் பயணமாக கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது. 80.65 மீ நீளம் கொண்ட இந்த ஹைட்ரோகிராஃபிக் கப்பலை தளபதி பெர்தியோ டிமிட்ரி வழிநடத்துகிறார். இந்தக் கப்பலில் 58 பணியாளர்கள் பணியாற்றுகின்றனர். வருகை தரும் குழுவினரும் அதன்... Read more »
உள்ளூராட்சி மன்ற தேர்தலின் முடிவுகள் தமிழ் தேசிய நிலைப்பாட்டுடன் பயணிக்கும் மக்களுக்கு கிடைத்த மாபெரும் வெற்றி என்பதுடன் அதற்கு கிடைத்த ஆணையாகவும் அமையுமென பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் சுட்டிக்காட்டியுள்ளார். யாழ்பாணத்தில் இன்று (10) ஊடக சந்திப்பொன்றை முன்னெடுத்து இவ்வாறு கூறிய அவர் மேலும்... Read more »
முல்லைத்தீவு குருந்தூர் மலை அடிவாரத்தில் உள்ள தமது சொந்த வயல் நிலங்களில் விவசாயம் செய்யும் பொருட்டு அதை உழவியந்திரம் மூலம் தயார் செய்த காணி உரிமையாளர் குருந்தூர்மலையில் சட்டவிரோதமாக விகாரை அமைத்துள்ள விகாராதிபதியால் தடுக்கப்பட்டுள்ளார். குருந்தூர் மலையில் கீழாக தமிழ் மக்களுக்கு சொந்தமான பல... Read more »
நிபந்தனையற்ற 30 நாள் போர் நிறுத்தத்திற்கு ஒப்புக்கொள்ளுமாறு ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினுக்கு ஐரோப்பா மற்றும் அமெரிக்கா அழைப்பு விடுப்பதாக பிரித்தானிய பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் தெரிவித்துள்ளார். புடின் இதற்கு மறுப்பு தெரிவித்தால் ரஷ்யா மீது மேலும் பாரிய தடைகளை விதிக்கத் தயாராகவுள்ளதாகவும் அவர்... Read more »
பாகிஸ்தானுக்கு 1 பில்லியன் டொலர் கடன் தொகைக்கு சர்வதேச நாணய நிதியம் அனுமதி அளித்துள்ளது. கடன் வழங்க இந்தியா எதிர்ப்பு தெரிவித்திருந்த நிலையில் சர்வதேச நிதியத்தின் நிர்வாக குழு கடனுக்கு ஒப்புதல் அளித்துள்ளது இதேவேளை, பாகிஸ்தானுக்கு வழங்கப்படும் தொடர்ச்சியான நிதியுதவி ராணுவ நோக்கங்களுக்காகவோ அல்லது... Read more »

