இந்திய ஜனாதிபதியிடம் இருந்து தேசிய விருதினை பெற்றுக்கொண்டார் லைக்கா புரடக்ஸனின் தலைவர் அல்லிராஜா சுபாஸ்கரன்

இந்தியாவின் 70 வது தேசிய விருது வழங்கும் விழாவில், சிறந்த தயாரிப்பாளருக்கான தேசிய விருதினை, லைக்கா குழுமத்தின் நிறுவனரும், லைக்கா புரடக்ஸன் நிறுவனத்தின் தலைவருமான அல்லிராஜா சுபாஸ்கரன் இந்திய ஜனாதிபதியிடம் இருந்து பெற்றுக்கொண்டார். அமரர் கல்கி எழுதிய வரலாற்றுப் புதினமான பொன்னியின் செல்வன் நாவலை... Read more »

இலங்கைக்கு பிரிக்ஸ் கூட்டமைப்பில் அங்கத்துவம்?

பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் அங்கத்துவம் பெறும் இலங்கையின் முயற்சிகளுக்கு பூரண ஒத்துழைப்பை வழங்கவுள்ளதாக இந்தியா தெரிவித்துள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளரான விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். எவ்வாறாயினும், இம்முறை ரஷ்யாவில் நடைபெறவுள்ள இந்த மாநாட்டில் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க கலந்து கொள்ள மாட்டார் என்றும் அவர் குறிப்பிட்டார்.... Read more »
Ad Widget

தபால் மூல வாக்கு விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளும் திகதி நீடிப்பு!

நாடாளுமன்றத் தேர்தல் தொடர்பான தபால் மூல வாக்கு விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளும் திகதி நீடிக்கப்பட்டுள்ளது. அதன்படி 2024 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 08 ஆம் திகதி நள்ளிரவு 12.00 மணியுடன் முடிவடையவிருந்த ஏற்றுக்கொள்ளும் திகதி 2024 ஒக்டோபர் 10 (வியாழன்) நள்ளிரவு 12.00 மணி... Read more »

ராஜபக்ஷக்களுக்கு எதிரான ஊழல் விசாரணைகள் ஆரம்பம்!

கடந்த காலத்தில் சர்ச்சைகளை ஏற்படுத்திய ராஜபக்ஷக்களுக்கு எதிரான அனைத்து ஊழல் மற்றும் மோசடி வழக்குகள் தொடர்பான விசாரணைகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தேசிய மக்கள் சக்தியின் தேசிய செயற்குழு உறுப்பினர் வசந்த சமரசிங்க தெரிவித்தார். இன்று (08) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துத்... Read more »

தேசிய பட்டியலின் மூலம் நாடாளுமன்றத்திற்குள் நுழைய ஆர்வம் காட்டும் SJB யின்மூத்த உறுப்பினர்கள்,

ஐக்கிய மக்கள் சக்தியைச் சேர்ந்த பல மூத்த உறுப்பினர்கள், இந்த வருடம் தேசிய பட்டியலின் மூலம் நாடாளுமன்றத்திற்கு நுழைவதற்கு கோரிக்கை விடுத்துள்ளனர் என அக்கட்சியிக் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கிங்ஸ் நெல்சன் தெரிவித்துள்ளார். அத்துடன் கட்சியின் தலைவரான சஜித் பிரேமதாசா மீண்டும் கொழும்பு மாவட்டத்தில்... Read more »

அநுரவுடன் இணைந்த வாசுதேவ நாணயக்கார

எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் தேசிய மக்கள் சக்திக்கு, ஜனநாயக இடதுசாரி முன்னணியின் ஆதரவை வழங்க அக்கட்சி முடிவு செய்துள்ளது. ஜனநாயக இடதுசாரி முன்னணியின் தலைவரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான வாசுதேவ நாணயக்கார, இன்று (08) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்துள்ளார். Read more »

அரச வங்கி ஒன்றில் பாதுகாப்பு உத்தியோகத்தரின் துப்பாக்கி செயற்பட்டதில் உத்தியோகத்தர் பலி

பொலன்னறுவை வெலிகந்த நகரிலுள்ள அரச வங்கி ஒன்றில் பாதுகாப்பு உத்தியோகத்தரின் துப்பாக்கி இன்று (08) மாலை திடீரென செயற்பட்டதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக வெலிகந்த பொலிஸார் தெரிவிக்கின்றனர். 113, சுசிரிகம, வெலிகந்தவில் வசிக்கும் மூன்று பிள்ளைகளின் தந்தையான 53 வயதுடைய டபிள்யூ.டி.ஜி. அநுர... Read more »

பதில் பொலிஸ்மா அதிபருக்கு அரசியலமைப்பு சபை அங்கீகாரம்

பதில் பொலிஸ் மா அதிபராக சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரியவை நியமிப்பதற்கு அரசியலமைப்பு சபை அங்கீகாரம் வழங்கியுள்ளது. புதிய ஜனாதிபதி நியமிக்கப்பட்டதன் பின்னர் முதன்முறையாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் அரசியலமைப்பு பேரவை இன்று (08) கூடியபோதே அது... Read more »

பிரதமர் ஹரிணி வேட்புமனுவில் கையெழுத்திட்டார்!

நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்பு மனுவில் பிரதமர் ஹரிணி அமரசூரிய இன்று (08) கையெழுத்திட்டுள்ளார். மேலும், தேசிய மக்கள் சக்தியை பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் விமல் கெட்டபேராச்சி, ஹர்ஷன நாணயக்கார, எரங்க குணசேகர உள்ளிட்ட பல வேட்பாளர்கள் இன்று தமது வேட்பு மனுக்களில் கையொப்பமிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. Read more »

அம்பாறை மாவட்டத்தில் EPDP தனித்து போட்டி!

திகாமடுல்ல மாவட்டத்தில் ஈழ மக்கள் ஜனநாயக கட்சி தனித்து போட்டியிட உள்ளதாக அக்கட்சியின் அம்பாறை மாவட்ட பிரதான அமைப்பாளர் முன்னாள் காரைதீவு பிரதேச சபையின் தவிசாளாருமான செல்லையா இராசையா தெரிவித்தார். எதிர்வரும் பொதுத்தேர்தல் தொடர்பில் விசேட செய்தியாளர் சந்திப்பு அம்பாறை மாவட்ட ஊடக அமையத்தில்... Read more »