மூன்றாது முறையாக மோடி பிரதமராக பதவியேற்பு: ஜனாதிபதி ரணிலும் பங்கேற்பு

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் பதவியேற்பு நிகழ்வில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கலந்து கொள்ளவுள்ளார். இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் அழைப்பின் பேரில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பதவியேற்பு விழாவில் பங்கேற்கவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. தேர்தல் வெற்றிக்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க... Read more »

வடக்கு கடற்பரப்பில் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள்

கேரள கஞ்சா தொகையுடன் இரண்டு சந்தேகநபர்கள் வடக்கு கடல் பரப்பில் வைத்து கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். கேரள கஞ்சாவை டிங்கி படகில் ஏற்றிச் சென்ற போது கடற்படையினர் அவர்களை கைது செய்தனர். யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த 34 மற்றும் 40 வயதுடைய இருவரே இவ்வாறு கைது... Read more »
Ad Widget

சிவில் கூட்டிணைவு ”தமிழ் மக்கள் பொதுச் சபை” என்று மாற்றம்

வடக்கு கிழக்கு சிவில் அமைப்புக்களின் கூட்டிணைவு என்று அழைக்கப்பட்ட தமிழ் குடிமக்கள் சமூகத்தின் கட்டமைப்பை இனிமேல், “தமிழ் மக்கள் பொதுச்சபை” என அழைப்பது என்று தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அறிக்கை ஒன்றின் மூலம் இன்று புதன்கிழமை அறிவிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் பொது வேட்பாளர் ஒருவரை தெரிவு... Read more »

பாரிஸ் ஒலிம்பிக் : நகர சுத்திகரிப்பில் அரசாங்கம் ஈடுபடுவதாக தொண்டு நிறுவனங்கள் கண்டனம்

பாரிஸில் இடம்பெறவுள்ள ஒலிம்பிக் போட்டிகளுக்கு முன்னதாக புலம்பெயர்ந்தோர், குடியேற்றவாசிகள், வீடற்றோர் மற்றும் பாலியல் தொழிலாளர்கள் மீது பிரான்ஸ் நடவடிக்கை எடுத்து வருகிறது. இவ்வாறான தரப்பினர் மீது நடவடிக்கை எடுப்பதன் மூலம் ஒலிம்பிக் போட்டிகளை நடத்தும் ஏனைய நகரங்களால் பின்பற்றப்படும் நடைமுறைகளை பிரான்ஸூம் பின்பற்றுவதாக குற்றம்... Read more »

பொன் சிவகுமாரன்: யாழ்.உரும்பிராயில் 50ஆவது ஆண்டு நினைவேந்தல்

ஈழப் போராட்ட வரலாற்றின் முதல் வித்தாகிப் போன பொன் சிவகுமாரனின் 50 ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு உரும்பிராயிலுள்ள பொன் சிவகுமாரனின் திருவுருவச்சிலை அமைவிடத்தில் இன்று 05.06.2024 புதன்கிழமை மாலை 4.30 மணிக்கு போராளிகள் நலன்புரிச் சங்கத்தால் பேரெழுச்சியுடன் முன்னெடுக்கப்பட்டது. போராளிகள் நலன்புரிச் சங்கத்தை... Read more »

ரிஷி சுனக்கின் புள்ளி விபரங்கள் முழுமையான குப்பை – தொழிற்கட்சி

தொழிலாளர் வரித் திட்டங்களைப் பற்றிய கன்சர்வேடிவின் மதிப்பீடு “சிவில் சேவையால் தயாரிக்கப்பட்டதாகக் காட்டப்படக்கூடாது” என உயர்மட்ட கருவூல சிவில் அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார். தொழிற்கட்சிக்கு எழுதிய பதில் கடிதத்திலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். நேற்றைய தினம் (05) இடம்பெற்ற நேருக்கு நேரான விவாதத்தில், தொழிலாளர்களின் திட்டங்கள்... Read more »

வட கொரியாவுடன் இராணுவ ஒப்பந்தங்களை இரத்து செய்த தென் கொரியா

வட கொரியாவிலிருந்து பலூன்களில் குப்பைகளை தென் கொரியாவுக்கு அனுப்பியதன் பின்னர் வட கொரியாவுடனான இராணுவ ஒப்பந்தங்களை இரத்து செய்ய தென் கொரியா தீர்மானித்துள்ளது. எனினும், தென் கொரியாவின் இராணுவ முயற்சிகளை மீள ஆரம்பிப்பது வட கொரியாவின் இந்த அமைதியின்மைக்கு காரணமாக அமைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள்... Read more »

பாகிஸ்தான் நிலக்கரி சுரங்கத்தில் விஷவாயு கசிவு: 11 பணியாளர்கள் உயிரிழப்பு

பாகிஸ்தான், பலுசிஸ்தான் மாகாணம், குவெட்டா நகரிலுள்ள தனியாருக்குச் சொந்தமான நிலக்கரி சுரங்கத்தில் திடீரென விஷவாயு கசிந்ததில் சுமார் 11 பேர் உயிரிழந்துள்ளனர். குறித்த சுரங்கத்தில் வழக்கம்போல் தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டிக் கொண்டிருந்தனர். 1500 அடி ஆழத்தில் பணியாளர்கள் வேலை செய்துகொண்டிருந்த போதே சுரங்கத்தில் திடீரென... Read more »

யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது

போலி கடவுச்சீட்டைப் பயன்படுத்தி கனடாவுக்குத் தப்பிச் செல்ல முற்பட்ட யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த 34 வயதுடைய இளைஞர் ஒருவர் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் (BIA) இன்று காலை கைது செய்யப்பட்டுள்ளார். விமான நிலைய குடிவரவு மற்றும் குடியகல்வு அதிகாரிகள் சந்தேக நபரை கைது செய்ததுடன்,... Read more »

மூன்றாவது முறையாக பிரதமராகின்றார் மோடி: எட்டாம் திகதி பதவியேற்பு

இந்தியாவின் பிரதமராக மூன்றாவது முறையாகவும் எதிர்வரும் எட்டாம் திகதி நரேந்திர மோடி பதவியேற்கவுள்ளார். இந்நிலையில், பதவியேற்பு நிகழ்வுக்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்திய லோக்சபா தேர்தல் ஏப்ரல் 19ஆம் திகதி முதல் ஜூன் முதலாம் திகதி வரை இடம்பெற்றிருந்தது. தேர்தல்... Read more »