பாரிஸில் இடம்பெறவுள்ள ஒலிம்பிக் போட்டிகளுக்கு முன்னதாக புலம்பெயர்ந்தோர், குடியேற்றவாசிகள், வீடற்றோர் மற்றும் பாலியல் தொழிலாளர்கள் மீது பிரான்ஸ் நடவடிக்கை எடுத்து வருகிறது.
இவ்வாறான தரப்பினர் மீது நடவடிக்கை எடுப்பதன் மூலம் ஒலிம்பிக் போட்டிகளை நடத்தும் ஏனைய நகரங்களால் பின்பற்றப்படும் நடைமுறைகளை பிரான்ஸூம் பின்பற்றுவதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
பல்வேறு அரச சார்பற்ற 80 தொண்டு நிறுவனங்களை ஒன்றிணைக்கும் “தி அதர் சைட் ஒப் த மெடல்” குழு வெளியிட்டுள்ள அறிக்கையிலே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, பாரிஸின் நடவடிக்கைகள் முன்னரை விட மாறுபடுமென கருதிய போதிலும், அவ்வாறானதொரு நிலை இல்லை எனவும், பாதிக்கப்பட்டவர்களை வெளியேற்றும் நடவடிக்கையினை துரித்தப்படும் எனவும் குறித்த குழு குறிப்பிட்டுள்ளது.
எதிர்வரும் ஜூலை மாதம் 26 ஆம் திகதி முதல் ஒகஸ்ட் மாதம் 11 ஆம் திகதிவரை பாரிஸ் ஒலிம்பிக் போட்டிகள் நடைபெறவுள்ளன.
இந்த நிலையில், பாரிஸின் வீதிகளில் உள்ளவர்கள், புலம்பெயர்ந்தோர், மற்றும் தற்காலிக கூடாரங்களில் வாழ்பவர்களை அகற்றும் நடவடிக்கையில் பொலிஸார் ஈடுபட்டு வருகின்றனர்.
இதன்படி, 2024 ஆம் ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் 26 தடவைகள் இவ்வாறான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.