நிறுத்தப்பட்ட திருமணம்: சிறுமியை கொலை செய்து தலையை கையோடு எடுத்துச்சென்ற மாப்பிள்ளை

திருமணம் நிறுத்தப்பட்ட விரக்தியில் மணமகளான 16 வயது சிறுமியின் தலையை வெட்டி கையோடு எடுத்துச் சென்ற மணமகனின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநிலம் குடகு மாவட்டத்தில் 32 வயதான வாலிபருக்கும் 16 வயதான சிறுமிக்கும் திருமணம் நடைபெறுவதற்கான நிச்சயதார்த்த ஏற்பாடுகள் நடைபெற்று வந்துள்ளது.... Read more »

பலஸ்தீனியர்களை ரஃபாவிலிருந்து வெளியேறுமாறு இஸ்ரேல் உத்தரவு

காசாவில் ஹமாஸுக்கு எதிரான தாக்குதல்கள் தீவிரப்படுத்தப்பட்டுள்ள நிலையில் ஆயிரக்கணக்கான பலஸ்தீனியர்களை ரஃபா நகரிலிருந்து வெளியேறுமாறு இஸ்ரேல் உத்தரவிட்டுள்ளது. அல்-மவாசியில் விரிவாக்கப்பட்ட மனிதாபிமான பகுதி என்று அழைக்கும் பகுதிக்கு செல்லுமாறு இஸ்ரேல் இன்று சனிக்கிழமை (11) உத்தரவிட்டுள்ளது. மத்திய காசாவில் பல பகுதிகளை இலக்கு வைத்து... Read more »
Ad Widget

ஆப்கானிஸ்தானில் வெள்ளம்: 200 இற்கும் மேற்பட்டோர் பலி

ஆப்கானிஸ்தானில் திடீர் வெள்ளம் காரணமாக 200 இற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். பாக்லான் மாகாணத்தில் நேற்று வெள்ளிக்கிழமை ஏற்பட்ட வெள்ளம் காரணமாக உயிரிழப்புகள் பதிவாகியதாக ஐக்கிய நாடுகள் சபை இன்று சனிக்கிழமை (11) தெரிவித்துள்ளது. மேலும் ஆயிரக்கணக்கான வீடுகள் சேதமடைந்துள்ளதாக என்று ஐ.நாவின் இடம்பெயர்வுக்கான சர்வதேச... Read more »

யாழ் சிறுமிக்கு பிறந்த குழந்தை: தாயுடன் தலைமறைவாகிய 15 வயது சிறுமி

யாழ்ப்பாணத்தில் சிறுமியொருவருக்கு பிறந்த குழந்தை யாழ் போதனா வைத்தியசாலையில் ஆதரவின்றி விட்டு செல்லப்பட்டுள்ளது. வடமராட்சி துன்னாலைப் பகுதியைச் சேர்ந்த 15 வயது சிறுமியொருவர் கர்ப்பம் தரித்த நிலையில் பிரசவத்திற்காக தனது தாயுடன் நேற்று வெள்ளிக்கிழமை (10) மாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். குழந்தை நேற்று இரவு... Read more »

மாகாண சபைத் தேர்தல் அறிவிப்பு போன்றதா ஜனாதிபதி தேர்தல் திகதியும்?: சந்தேகம்

மாகாண சபைத் தேர்தலுக்கு திகதி குறித்த பின்னரும் தேர்தல் நடைபெறவில்லை. இதுபோன்ற நிலைதான் ஜனாதிபதித் தேர்தலுக்குத் திகதிகள் அறிவிக்கப்பட்ட பின்னரும் தேர்தல் நடைபெறாமல் போகலாம் என்று பலரும் கருதும் நிலை உருவாகியுள்ளது. ஜனாதிபதித் தேர்தலுக்கு சுமார் மூன்று மாதங்கள் காணப்படும் நிலையில் ஜனாதிபதித் தேர்தல்... Read more »

பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளராக தம்மிக்க பெரேரா?

மகிந்த ராஜபக்ச தலைமையிலான ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளராக முன்மொழியப்பட்டுள்ள தொழிலதிபர் தம்மிக்க பெரேரா உட்பட நால்வர் தொடர்பில் கலந்துரையாடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாகக் கொழும்பில் இருந்து வெளி வரும் லங்காதீப நாளிதழின் இணையத்தளத்தில் செய்தி வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி, இது தொடர்பில் எதிர்வரும் வாரங்களில் கலந்துரையாடுவதற்கு... Read more »

அரசியல் அறிவுடன் மக்கள் சிந்திக்க வேண்டும்: கே.டி.லால்காந்த

நாட்டு மக்கள் அனைவரும் ஆயுதம் ஏந்த வேண்டும் என ஜே.வி.பி தெரிவித்துள்ளது. ஆயுதம் ஏந்தினால் பிரச்சினை இல்லை, ஆனால் அரசியல் அறிவுடன் ஆயுதம் ஏந்த வேண்டுமே தவிர துப்பாக்கி எடுக்கக் கூடாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அண்மையில் இணைய ஊடகம் ஒன்றில் இடம்பெற்ற விவாதத்தில் கலந்துகொண்ட... Read more »

புதிதாக அறிமுகம் செய்யப்பட்ட ‘Vu Cinema TV

இந்தியாவில், Vu Televisions நிறுவனமானது, Vu Cinema TV 2024 எடிஷன் என்ற புதிய தொலைக்காட்சி மொடலை அறிமுகம் செய்துள்ளது. 43-55 இன்ச் அளவுகளையுடைய இந்த தொலைக்காட்சி, 50W யூடியூப் ஸ்பீக்கர்கள் போன்ற அம்சங்களைக் கொண்டுள்ளது. விபரங்கள் இந்த தொலைக்காட்சியில் 4000nits மேம்பட்ட பிரகாசத்துடனான... Read more »

பாலஸ்தீனம் தொடர்பில் ஐ.நாவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம்

பாலஸ்தீனத்திற்கான முழு உறுப்புரிமை கோரிக்கை வெற்றிபெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஐக்கிய நாடுகள் சபையில், பாலஸ்தீனத்திற்கு நிரந்தர உறுப்புரிமை வழங்குவது குறித்து ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபை பரிசீலிக்கவேண்டும் என்ற தீர்மானக் கோரிக்கையை ஐக்கிய நாடுகள் சபை நிறைவேற்றியுள்ளது. இந்த தீர்மானத்திற்கு ஆதரவாக 143 நாடுகள் வாக்களித்துள்ளன.... Read more »

சவுக்கு சங்கரை தொடர்ந்து ரெட் பிக்ஸ் எடிட்டர் ஃபெலிக்ஸ் ஜெரால்டை தூக்கிய போலீஸ்!

தமிழ்நாடு காவல்துறை அதிகாரிகளையும், பெண் காவலர்களையும் அவதூறாகப் பேசியதாக சவுக்கு சங்கர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இது தொடர்பாக சவுக்கு சங்கர் கைது செய்யப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். சவுக்கு சங்கர் கைது செய்யப்பட்ட நிலையில் ரெட் பிக்ஸ் யூடியூப் சேனலின்... Read more »