பசுக்களுக்கு தோல் நோய்: பால், இறைச்சியை உட்கொள்வதால் பாதிப்பில்லை

கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதார திணைக்களம் மற்றும் தனியார் துறை இணைந்து நுவரெலியா மாவட்டத்தில் பசுக்களுக்கு பரவி சரும் எல்.எஸ்.டி நோயை (LSD Dieses) கட்டுப்படுத்துவதற்கு தேவையான தடுப்பூசிகளை வழங்குவதற்கான கூட்டு வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்தியுள்ளதாக கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதார திணைக்களத்தின் பணிப்பாளர் டொக்டர்... Read more »

மட்டக்களப்பில் ஒரே கருவில் நான்கு குழந்தைகளை இயற்கை முறையில் பெற்ற பெண்

மருத்துவ வரலாற்றில் ஒரு கருவில் நான்கு குழந்தைகளை ஆரோக்கியமான முறையில் தாய் ஒருவர் பிரசவித்துள்ள சம்பவம் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் இடம்பெற்றுள்ளது. மட்டக்களப்பு புதுக்குடியிருப்பு பகுதியை சேர்ந்த கரிகரன் கிருஸ்ணவேணி என்னும் தாயே இந்த குழந்தைகளை பிரசவித்துள்ளார். மருத்துவத்துறையின் வரலாற்றில் இயற்கை முறையில் இவ்வாறு... Read more »
Ad Widget

ஷிரந்தியிடம் கையளிக்கப்பட்ட தமிழ் குழந்தைகளுக்கு என்ன நடந்தது?: சட்டம் மரணித்துவிட்டதா?

இறுதி யுத்தத்தின்போது அரசாங்கத்திடம் கையளிக்கப்பட்ட, குறிப்பாக முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் துணைவியார் ஷிரந்தி ராஜபக்சவிடம் கையளிக்கப்பட்ட குழந்தைகளுக்கு என்ன நடந்தது என சர்வதேச மன்னிப்புச் சபையின் செயலாளர் நாயகம் Agnes Callamard கேள்வியெழுப்பியதாக நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன் சுட்டிக்காட்டியுள்ளார். நாடாளுமன்றில் இன்று உரையாற்றிய... Read more »

‘புஷ்பா 2 தி ரூல்’ செகண்ட் சிங்கிள்’: நாளை

அல்லு அர்ஜூன், ராஷ்மிகா மந்தனா நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் புஷ்பா 2. இந்நிலையில் இத் திரைப்படத்தின் பர்ஸ்ட் சிங்கிளான ‘புஷ்பா புஷ்பா’ கடந்த மாதம் வெளியானது. தற்போது இதன் செகண்ட் சிங்கிளான ‘ஸ்ரீவள்ளி’ நாளை 11.07க்கு வெளிவரும் என்பதை படக்குழு அறிவித்துள்ளது. Read more »

நடுவானில் திடீரென குலுங்கிய விமானம்: ஒருவர் பலி 71 பேர் காயம்

லண்டனிலிருந்து சிங்கப்பூர் நோக்கி பயணித்த விமானம் நடுவானில் திடீரென குலுங்கியதில் பயணியொருவர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் 71பேர் காயமடைந்துள்ளனர். இந்த அனர்த்தத்தில் உயிரிழந்த பயணி பிரித்தானிய பிரஜை என தகவல் வௌியாகியுள்ளது. லண்டனின் ஹீத்ரோவிலிருந்து நேற்று முன்தினம் புறப்பட்ட சிங்கப்பூர் எயார்லைன்ஸின் SQ 321 போயிங்... Read more »

முள்ளிவாயக்கால் நினைவேந்தல்: விடுதலைப் புலிகள் கௌரவிக்கப்படுவதாக குற்றச்சாட்டு

இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கில் கடந்த வாரம் முன்னெடுக்கப்பட்ட முள்ளிவாயக்கால் நினைவேந்தல் நிகழ்வுகளுக்கு அனுமதி வழங்கியமைக்காக நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில் அரசாங்கத்தை விமர்சித்துள்ளார். இந்த நிகழ்வு மூலம் தமிழீழ விடுதலைப் புலிகள் கௌரவிக்கப்பட்டதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். கொழும்பில் செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு பேசிய... Read more »

விபத்தில் உயிரிழந்த கணவனுக்கு உரிமை கோரும் 4 மனைவிகள்

குளியாப்பிட்டிய மருத்துவ பீடத்திற்கு அருகில் நேற்று முன்தினம் மாலை இடம்பெற்ற விபத்தில் பரிதாபகரமாக ஒரு குடும்பஸ்தர் உயிரிழந்தார். தற்போது இவரின் சடலத்தை ஏற்றுக்கொள்ள நான்கு மனைவிகள் முன்வந்துள்ளதாக குளியாப்பிட்டிய வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன. சம்பவத்தின் பின்னணி பொலன்னறுவை உட்பட பல பிரதேசங்களில் வசிக்கும் பிரேமரத்ன... Read more »

கமலின் இந்தியன் 2 முதல் சிங்கிளின் ப்ரோமோ வெளியானது

முதல் முறையாக இயக்குனர் சங்கர் இயக்கத்தில் இந்தியன் 2 படத்திற்காக அனிருத் இசையமைத்துள்ள பாரா பாடலின் முழு காணொளி இன்று மாலை வெளியாகவுள்ளது. மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ள இந்த பாடல் இன்று 5.00 மணிக்கு வெளியாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது. மேலும் இது... Read more »

தெருநாயால் கடித்து குதறப்பட்ட 4 வயது சிறுமி உயிரிழந்த சோகம்

இந்தியாவில் தெருநாய்க் கடியினால் உயிரிழப்புக்கள் அதிகரித்துள்ளதுடன் பலரும் பலத்த காயங்களுக்கு உள்ளாகின்ற செய்திகள் அண்மைக் காலமாக சமூக வலைத்தளத்தில் பரவி வருகின்றது. இந்நிலையில் தெருநாய் கடித்து 4 வயது சிறுமியொருவர் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநிலம், ராய்ச்சூர், கோரவிகல் கிராமத்தைச்... Read more »

பாணுக்குள் கண்ணாடிப் பீங்கான் துண்டு – யாழில் சம்பவம்!

பாண் வாங்கி சாப்பிட்டவர் பாணுக்குள் கண்ணாடிப் பீங்கான் துண்டைக் பார்த்து அதிர்ச்சியடைந்த சம்பவமொன்று யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றுள்ளது. யாழ்ப்பாணம் மருதானர்மடத்தில் உள்ள கடையொன்றில் நேற்று (21) இரவு வாங்கிய பாணிலேயே கண்ணாடிப் பீங்கான் துண்டு காணப்பட்டுள்ளது. குறித்த கடைக்கு சுன்னாகம் பகுதியில் உள்ள வெதுப்பகம் ஒன்றில்... Read more »