நாட்டின் உத்தியோகபூர்வ கையிருப்பு அதிகரிப்பு

கடந்த ஆண்டு டிசெம்பர் மாதத்துடன் ஒப்பிடுகையில், நாட்டின் உத்தியோகபூர்வ கையிருப்பு 2.3% ஆல், அதிகரித்து 4.4 பில்லியன் அமெரிக்க டொலர்களாக உள்ளது. இது டிசெம்பரில் 4.3 பில்லியன் டொலர்களாக பதிவு செய்யப்பட்டது. Read more »

அநுரவின் டில்லி பயணத்தால் சீனா அதிருப்தி

இந்திய அரசாங்கத்தின் அழைப்பின் பேரில் தலைநகர் புதுடில்லிக்குச் சென்றுள்ள ஜே.வி.பி எனப்படும் தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான உயர்மட்ட குழுவினர் பல்வேறு அதிகாரப்பூர்வ சந்திப்புகளை நடத்தி வருகின்றனர். நேற்றுமுன்தினம் திங்கட்கிழமை வெளிவிவகார அமைச்சர் சுப்ரமணியம் ஜெய்சங்கரை சந்தித்த அநுரகுமார திஸாநாயக்க,... Read more »
Ad Widget Ad Widget

தேசிய மக்கள் சக்தியின் பதிவை கேள்விக்குட்படுத்தும் நாகானந்த

தேசிய மக்கள் சக்தியை (National People’s Power) தேர்தல்கள் ஆணைக்குழு பதிவு செய்ததை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. சட்டத்தரணி நாகானந்த கொடித்துவக்குவினால் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. வினிவித பெரமுனவை அரசியல் கட்சியாக பதிவு செய்வதை நிராகரித்து தேர்தல்கள்... Read more »

தேர்தலுக்கு முன் பாகிஸ்தானை உலுக்கிய குண்டு வெடிப்புகள்: 20 பேர் பலி

பாகிஸ்தானின் பலுசிஸ்தானில் தேர்தல் வேட்பாளர்களை குறிவைத்து இன்று புதன்கிழமை இரு வேறு குண்டுத் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன. பாகிஸ்தானின் பொதுத் தேர்தலுக்கு ஒரு நாள் முன்னதாக இந்த தாக்குதல் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன. தாக்குதலில் குறைந்தது 20 பேர் கொல்லப்பட்டதாகவும் சுமார் 40 பேர் காயமடைந்ததாகவும் ஜியோ... Read more »

யாழ்ப்பாணம் வந்தார் பிரபல பாடகர் ஹரிஹரன்

ஹரிஹரன் இசை நிகழ்வுக்காக (Hariharan Live in concert) இந்திய பாடகர் ஹரிஹரன் உள்ளிட்ட குழுவினர் இன்று யாழ்ப்பாணத்தை வந்தடைந்துள்ளனர். யாழ்.முற்றவெளி மைதானத்தில் எதிர்வரும் 09ம் திகதி ஹரிகரனின் இசை நிகழ்வு நடைபெறவுள்ளது. NORTHERN UNIஇன் ஏற்பாட்டில் நடைபெறும் இந்நிகழ்வுக்காக பிரம்மாண்ட முறையில் முற்றவெளியில்... Read more »

மீனவர் பிரச்சினைக்கு சுமூகமான தீர்வு

இந்திய இழுவை மடி படகுகள் தொடர்பான பிரச்சினைக்கு நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமானிடமும் , தமிழக வெற்றி கழகத்தை ஆரம்பித்துள்ள நடிகர் விஜயிடமும் கோரிக்கை விடுப்பதாக யாழ். மாவட்ட கடற்றொழிலாளர் கூட்டுறவு சங்கங்களின் சம்மேள முன்னாள் தலைவர் அ.அன்னராசா தெரிவித்துள்ளார். யாழ். மாவட்ட... Read more »

பொருளாதாரத்தை மறுசீரமைக்க அனைத்துக் கட்சிகளுக்கும் ஜனாதிபதி அழைப்பு

இலங்கை பொருளாதார ரீதியாக ஸ்திரத்தன்மை அடையும் சூழல்நிலை உருவாகும் போது மக்கள் மீதான வரிச்சுமை குறைக்கப்படும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். ஒன்பதாவது நாடாளுமன்றதின் ஐந்தாவது அமர்வு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் இன்று (07) சம்பிரதாயபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது. அரசாங்கத்தின் கொள்ளை... Read more »

பொருளாதார முன்னேற்றத்தில் கவனம் செலுத்திய ரணில்

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் கொள்கை விளக்க உரையில் இலங்கைத் தீவின் பொருளாதார முன்னேற்றங்கள் மற்றும் பலவீனங்கள் பற்றிய விபரங்கள் எதிர்கால பொருளாதார செயற்பாடுகள் தொடர்பாக அதிக கவனம் செலுத்தப்பட்டிருந்தது. இன்று புதன்கிழமை இலங்கை ஒற்றையாட்சி அரசின் நாடாளுமன்றத்தில் ஐந்தாவது கூட்டத்தொடரை ஜனாதிபதி ரணில் ஆரம்பித்து... Read more »

யாழ்.புத்தூர் பொலிஸார் துப்பாக்கி சூடு: மூவர் கைது

யாழ்ப்பாணம் – புத்தூர் பகுதியில் அனுமதி பத்திரமின்றி மணல் ஏற்றி சென்ற டிப்பர் வாகனம் மீது இன்று துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டதுடன், மூன்று பேர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டனர். சட்டவிரோத மணலுடன், டிப்பர் வாகனம் ஒன்று வேகமாக பயணிப்பதாக பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு இரகசிய... Read more »

ஐ.ம.முன்னணியின் தலைமைத்துவ சபை தலைவராக முன்னாள் ஜனாதிபதி

ஐக்கிய மக்கள் முன்னணியின் தலைமைத்துவ சபையின் தலைவராக முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவை நியமிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. ஐக்கிய மக்கள் முன்னணியின் அரசியலமைப்பு திருத்தம் தொடர்பில் நேற்று செவ்வாய்கிழமை இடம்பெற்ற செயற்குழு கூட்டத்தில் இந்தத் தீர்மானம் எட்டப்பட்டதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஊடகப் பேச்சாளர்... Read more »