லண்டனில் அமுலுக்கு வர இருக்கும் நடைமுறை

லண்டன் மேயர், சாதிக் கானின் “விஷன் 0” பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக, 2041 ஆம் ஆண்டுக்குள் லண்டனில் சாலை மரணங்களை முற்றிலுமாக இல்லாமல் செய்வதை நோக்கமாகக் கொண்டு, கேம்டன், இஸ்லிங்டன், ஹாக்னி, டவர் ஹேம்லெட் மற்றும் ஹாரிங்கி ஆகிய நகரங்கள் 20mph மண்டலத்தில் சேர்க்கப்பட்டுள்ளன.... Read more »

திருகோணமலையில் இடம்பெற்ற மோதலில் பெண் ஒருவரின் கை துண்டிப்பு!

திருகோணமலை – கோணேஷபுரி பகுதியில்தாயும்,மகளும் வாள்வெட்டுக்கு இலக்கான சம்பவமொன்று பதிவாகியுள்ளது. இச்சம்பவம் நேற்று (01.04.2023) மாலை இடம்பெற்றுள்ள நிலையில் தாயும்,மகளும் திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இரண்டு குழுக்களுக்கு இடையில் ஏற்பட்ட வாக்குவாதம் கைகலப்பாக மாறியதால் பெண்ணொருவரின் கை துண்டிக்கப்பட்ட நிலையில், திருகோணமலை பொது... Read more »
Ad Widget

நிலநடுக்கங்கள் குறித்து இலங்கை மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!

கொழும்பு மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் இதுவரை நில அதிர்வு அளவீடுகள் பொருத்தப்படாத பகுதிகளில் விரைவில் நில அதிர்வு அளவீடுகள் பொருத்தப்பட வேண்டும் என புவியியல் சிரேஷ்ட பேராசிரியர் அதுல சேனாரத்ன கூறியுள்ளார். இலங்கையில் மேலும் நிலநடுக்கம் ஏற்படும் போக்கு காணப்படுவதால், நிலநடுக்கம் குறித்து... Read more »

இலங்கை மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!

இலங்கை மக்களிடையே இன்புளுவன்சா ஏ மற்றும் பி ஆகிய இரண்டு நோய்களும் பரவி வருவதாக ரிட்ஜ்வே ஆர்யா சிறுவர் வைத்தியசாலையின் சிறுவர் வைத்திய நிபுணர் டொக்டர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார். கடந்த சில நாட்களாக ரிட்ஜ்வே ஆர்யா சிறுவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள குழந்தைகளிடம் இருந்து... Read more »

இலங்கையில் நடாத்தப்பட்ட இசை நிகழ்ச்சியால் பரபரப்பு!

பொலன்னறுவையில் இசை நிகழ்ச்சி ஒன்று ஏற்பாடு செய்து ரசிகர்களை ஏமாற்றிய சம்பவம் தொடர்பில் செய்தி ஒன்று வெளியாகி உள்ளது. குறித்த இசை நிகழ்ச்சி நேற்று முன்தினம் இரவு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. நிகழ்ச்சிக்கு முன்னதாக ஏற்பாட்டாளர்களால் விளம்பரப்படுத்தப்பட்ட கலைஞர்கள் கச்சேரிக்கு பாடல்கள் பாட வராததால், அரங்கில்... Read more »

இனி சட்ட ஒழுங்கை மீற இடமில்லை -ஜனாதிபதி ரணில்விக்ரமசிங்க

தான் ஜனாதிபதியாக இருக்கும் காலத்தில் சட்டம் ஒழுங்கை மீற எவருக்கும் இடமளிக்கப் போவதில்லை என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். அதேபோல் தான் ஒருபோதும் பிரச்சித்தமான தீர்மானங்களை மேற்கொள்ளப் போவதில்லை எனவும், மாறாக சரியான தீர்மானங்களையே எடுப்பதாகவும் தெரிவித்த ஜனாதிபதி, பிரசித்தமான தீர்மானங்களினால் நாட்டிற்கு... Read more »

கறுப்புக் கொடி, பதாதைகள் காட்சிப்படுத்தப்படுத்த தடை!

வைத்தியசாலை வளாகத்தினுள் கறுப்புக் கொடி, பதாதைகள் காட்சிப்படுத்தப்படுவதற்கு தடை விதித்து சுகாதார அமைச்சின் செயலாளர் சுற்றுநிருபம் ஒன்றை வெளியிட்டுள்ளார். உயிருக்கு போராடும் நிலையிலுள்ள நோயாளிகள் கறுப்புக் கொடியை பார்ப்பதால் மன உளைச்சலுக்கு ஆளாகும் நிலை ஏற்படும் என சுகாதார அமைச்சின் செயலாளர் தனது சுற்றுநிருபத்தில்... Read more »

இன்றைய ராசிபலன்02.04.2023

மேஷம் மேஷம்: குடும்ப வருமானத்தை உயர்த்த புது முயற்சிகளை மேற்கொள்வீர்கள். நீண்ட நாள் பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள். உங்களின் உடல்நலம் சீராகும். உங்களைச் சுற்றியிருப்பவர்களில் நல்லவர்கள் யார் என்பதை கண்டறிவீர்கள். உத்தியோகத்தில் அதிகாரிகள் வலிய வந்து உதவுவார்கள். கனவு நனவாகும் நாள். ரிஷபம் ரிஷபம்: பால்ய... Read more »

இலங்கை விடுதியொன்றில் வைத்து 28 சீன பிரஜைகள் கைது!

30 மில்லியன் பணத்தை மோசடி செய்து இலங்கைக்கு தப்பிச் வந்த 28 சீன பிரஜைகள் சுற்றுலா விடுதி ஒன்றில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தேக நபர்களில் 5 சீன பெண்களும் உள்ளதாக அளுத்கம பொலிஸார் தெரிவித்துள்ளனர். அவர்களிடம் இருந்து மடிக்கணினிகள் மற்றும் பெறுமதியான கைத்தொலைபேசிகளும்... Read more »

வெடுக்குநாறி மலையில் சிவலிங்கம் பி்ரதிஸ்டை செய்வதில் சிக்கல்!

வவுனியா வெடுக்குநாறி மலையில் சிவலிங்கம் பி்ரதிஸ்டை செய்யப்படவுள்ள நிலையில் தொல்பொருள் திணைக்களத்தால் ஆட்சேபம் தெரிவித்து சட்ட நடவடிக்கை எடுக்ககோரி பொலிஸாருக்கு கடிதம் வழங்கப்பட்டுள்ளதுடன் அப்பகுதியில் சிரமதானத்தில் ஈடுபட்ட மூவர் பொலிஸாரால் விசாரணைக்காகவும் அழைத்து செல்லப்பட்டுள்ளனர். இன்று (01) மாலை இடம்பெற்ற இச் சம்பவம் குறித்து... Read more »