முன்னாள் இராஜாங்க அமைச்சரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான வியாழேந்திரனின் வேட்பு மனு நிராகரிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலுக்காக, ஜனநாயக தேசிய முன்னணி கட்சியின் சார்பில் கையளிக்கப்பட்ட வேட்பு மனுவே, இவ்வாறு நிராகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்றத் தேர்தலுக்காக வேட்பு மனு தாக்கல் செய்யும் செயற்பாடுகள் இன்று... Read more »
கந்தளாய் சீனி தொழிற்சாலைக்குச் சொந்தமான 11,000 ஏக்கர் காணியை விவசாயிகளுக்கு வழங்குமாறு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க பணிப்புரை விடுத்துள்ளார். குறித்த காணி குறுகிய கால பயிர்ச்செய்கைக்கு வழங்கப்படவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான பணிப்புரை அமைச்சின் உரிய அதிகாரிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது.... Read more »
மட்டக்களப்பில் பாலத்த பாதுகாப்புக்கு மத்தியில்; அரசியல் கட்சிகள் சுயேச்சைக் குழுக்கள் 10ம் திகதி வியாழக்கிழமை படையெடுத்து வேட்பு மனுத்தாக்கல் செய்து வருகின்றதுடன் இதுவரை 10 அரசியல் கட்சிகளும் 11 சுயேச்சைக்குழுக்களும் வேட்பு மனுத் தாக்கல் செய்துள்ளதாக மட்டு மாவட்ட தேர்தல் உதவி ஆணையாளர் எம.பி.எம.... Read more »
மட்டக்களப்பு மாவட்டத்தில் ஜனநாயகத் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் சார்பில் நாடாளுமன்றப் பொதுத்தேர்தல் 2024 ற்கான வேட்புமனுவில் முன்னாள் போராளிகள் சார்பில் ஜனநாயகப் போராளிகள் கட்சியின் உபதலைவர் என்.நகுலேஸ் இன்றையதினம் கையொப்பமிட்டார். நாடாளுமன்றத் தேர்தலில் சங்கு சின்னத்தில் களமிறங்கும் ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணி வடகிழக்கில் ஐந்து... Read more »
பொதுத்தேர்தலுக்காக மட்டக்களப்பு மாவட்டத்தில் 17சுயேட்சைக்குழுக்கள் இதுவரை கட்டுப்பணம் செலுத்தியுள்ளதுடன் இரண்டு சுயேட்சைக்குழுக்கள் மற்றும் ஒரு அரசியல் கட்சி இதுவரை வேட்புமனுக்களை சமர்ப்பித்துள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட தெரிவித்தாட்சி அதிகாரியும் அரசாங்க அதிபருமான ஜே.ஜே.முரளிதரன் தெரிவித்துள்ளார். மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் நேற்று பிற்பகல் நடைபெற்ற விசேட ஊடகவியலாளர்... Read more »
களுவாஞ்சிக்குடியில் 16 பேர் கொண்ட குழுவுடன் சென்ற மருமகன் மாமியாரை பாலியல் துஸ்பிரயோகம் செய்துவிட்டு 35 பவுண் தங்க நகைகள் பணத்தை திருடிவிட்டு தப்பிச்சென்றுள்ளார். தனிமையில் இருந்த 35 வயதுடைய மாமியாரின் வீட்டை 16 பேர் கொண்ட குழுவுடன் சென்று மருமகன் வீட்டை உடைத்து... Read more »
கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி திருமதி சகீலா இஸ்ஸதீன் பனங்காடு பிரதேச வைத்தியசாலை அபிவிருத்திக் குழுவினரை சந்தித்து அவ் வைத்தியசாலை அபிவிருத்தி தொடர்பாக கலந்துரையாடினார். வைத்தியசாலையின் தேவைகள் மற்றும் குறைபாடுகளை கேட்டறிந்து கொண்ட பிராந்திய பணிப்பாளர் சுகாதார மேம்பாடு மற்றும்... Read more »
திகாமடுல்ல மாவட்டத்தில் ஈழ மக்கள் ஜனநாயக கட்சி தனித்து போட்டியிட உள்ளதாக அக்கட்சியின் அம்பாறை மாவட்ட பிரதான அமைப்பாளர் முன்னாள் காரைதீவு பிரதேச சபையின் தவிசாளாருமான செல்லையா இராசையா தெரிவித்தார். எதிர்வரும் பொதுத்தேர்தல் தொடர்பில் விசேட செய்தியாளர் சந்திப்பு அம்பாறை மாவட்ட ஊடக அமையத்தில்... Read more »
அம்பாறை, புத்தங்கல வீதியிலுள்ள கழிவு மறுசுழற்சி நிலையத்தின் அருகில் இறந்து கிடக்கும் யானை தொடர்பில் விசாரணை முன்னெடுக்கப்பட்டுள்ளது. கடந்த சனிக்கிழமை (5) குறித்த யானை அப்பகுதியில் குவிந்துள்ள குப்பைகளை உண்ட நிலையில் திடீரென உயிரிழந்திருந்தது. இதனைத்தொடர்ந்து சம்பவ இடத்திற்கு பொலிஸார், வனஜீவராசிகள் பாதுகாப்புத் திணைக்கள... Read more »
உழவு இயந்திரத்துடன் கனரக வாகனம் மோதியதில் ஒருவர் சம்பவ இடத்திலேயே மரணமடைந்துள்ளார். மேலும் ஒருவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார். அம்பாறை மாவட்டம், சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கல்முனை – அம்பாறை பிரதான வீதியில் அமைந்துள்ள மல்வத்தை பள்ளிவாசலுக்கு அருகாமையில் நேற்று சனிக்கிழமை மாலை... Read more »