மட்டக்களப்பில் முஸ்லிம் விவாக பதிவாளர்களுக்கான நேர்முக பரீட்சை..!

மட்டக்களப்பில் முஸ்லிம் விவாக பதிவாளர்களுக்கான நேர்முக பரீட்சை..!

மட்டக்களப்பு மாவட்டத்தில் முஸ்லிம் விவாக பதிவாளர்களுக்கான நேர்முக பரீட்சைகள் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் ஜே.எஸ்.அருள்ராஜ் அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் மேலதிக மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி சுதர்ஷினி ஸ்ரீகாந்த் தலைமையில் இன்று (06) புதிய மாவட்ட செயலகத்தில் இடம் பெற்றது.

மாவட்டத்தின் காத்தான்குடி பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட காத்தான்குடி தெற்கு, காத்தான்குடி மத்தி , ஏறாவூர் நகர் பிரதேச செயலாளர் பிரிவில், மற்றும் கோரளைப்பற்று வடக்கு பிரதேச செயலாளர் பிரிவின் ரிதிதென்ன பிரிவிற்க்கான முஸ்லிம் விவாக பதிவாளர்களுக்கான நேர்முக பரிட்சை இடம் பெற்றன.

இந் நிகழ்வில் கிழக்கு வலய பிரதி பதிவாளர் நாயகம் கே.நடராஜா, மாவட்ட புள்ளிவிபரவியலாளர் ரீ.ஜெய்தனன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Recommended For You

About the Author: admin