அரசாங்க ஊழியர்களுக்கு இந்த வருட வரவு செலவுத் திட்டத்தில் 20,000 ரூபா சம்பள அதிகரிப்பு தேவையென தேசிய தொழிற்சங்க நிலையம் தெரிவித்துள்ளது. கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அதன் அழைப்பாளர் வசந்த சமரசிங்க மேற்கண்டவாறு தெரிவித்தார். அனைத்து தொழிற்சங்கங்களும்... Read more »
யாழில் இயங்கும் சட்டவிரோத மதுபான சாலைகள் மற்றும் அவை குறித்த முழுமையான விபரங்களைச் சமர்ப்பிக்குமாறு வடமாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் , யாழ்.மாவட்ட மது வரி திணைக்கள அதிகாரிக்கு பணிப்புரை விடுத்துள்ளார். இன்று இடம்பெற்ற யாழ் மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்திலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.... Read more »
நானாட்டான் – முசலி கால்நடை வளர்ப்போர் கூட்டுறவுச் சங்கத்தினால் கட்டுக்கரைக்குளத்திற்குட்பட்ட புல்லறுத்தான் கண்டல் மேச்சல் தரை காணியை விடுவிக்கக்கோரி கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்று இன்றைய தினம் 26-10-2023 முன்னெடுக்கப்பட்டது. பல்வேறு அதிகாரிகளுக்கும், அரசியல்வாதிகளுக்கும் எழுத்து மூலமும் நேரடியாகவும் பல தடவைகள் கோரிக்கை விடுத்தும் பயனற்று... Read more »
காலி கோட்டை சுவரை பார்வையிடுவதற்காக பிரவேசிக்கும் வெளிநாட்டவர்களிடம் கட்டணம் அறவிட தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை காலி பாரம்பரிய அறக்கட்டளை மற்றும் மத்திய கலாசார நிதியம் என்பன இணைந்து தீர்மானித்துள்ளதாக பிரதேச மக்கள் தெரிவித்துள்ளனர். காலி கோட்டை பகுதியில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில்... Read more »
மொனராகலையில் சார்ஜன்ட் ஒருவரைத் தாக்கி காயப்படுத்திய இராணுவ சிப்பாய் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மொனராகலை, தம்பகல்ல பிரதேசத்தில் இத் தாக்குதல் சம்பவம் இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சந்தேக நபர் தொடர்பில் தெரிய வந்தவை சந்தேக நபரான இராணுவ சிப்பாய் அநுராதபுரம் சாலியபுர முகாமில்... Read more »
பெருந்தொகையான நெல் சந்தைப்படுத்தல் சபையின் களஞ்சியசாலைகளில் இருந்த திருடப்பட்டமை தொடர்பில் 04 களஞ்சியசாலை காப்பாளர்கள் சேவையில் இருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளனர். நிக்கவெரட்டிய, மஹவ மற்றும் ஆனமடுவ ஆகிய பிரதேசங்களில் உள்ள நெல் களஞ்சியசாலைகளின் காப்பாளர்கள் நால்வரே சேவையில் இருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளதாக நெல் சந்தைப்படுத்தல் சபையின் தலைவர்... Read more »
கூட்டணி அரசியல் குறித்து ஜனாதிபதி நன்கு புரிந்துகொள்ள வேண்டும், அத்துடன் அமைச்சரவை மாற்றத்தின் மூலம் பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியாது என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார். கொழும்பில் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்த போதே அவர் இதனைக் தெரிவித்துள்ளார்.... Read more »
தேசிய அடையாள அட்டை வழங்குவதற்கு அறவிடப்படும் கட்டணத்தில் திருத்தம் செய்வதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் பொது பாதுகாப்பு அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ளது. புதிய கட்டண முறைகள் தேசிய அடையாள அட்டையின் சான்றளிக்கப்பட்ட பிரதிக்கான கட்டணம் 2,000 ரூபாவாக இருக்க வேண்டும்... Read more »
சந்தையில் தேங்காய் ஒன்றின் விலை வேகமாக அதிகரித்துள்ளதாக நுகர்வோர்கள் தெரிவித்துள்ளனர். கொழும்பு உள்ளிட்ட சில பிரதேசங்களில் தற்போது தேங்காய் ஒன்றின் விலை 120 ரூபாவாக அதிகரித்துள்ளதாக நுகர்வோர் கவலை வெளியிட்டுள்ளனர். விற்பனை விலை பொதுச் சந்தையில் பெரிய தேங்காய் ஒன்று 100 தொடக்கம் 120... Read more »
கொழும்பு மாநகர சபைக்கு சொந்தமான பழைய பத்திரிகைகள் கொள்ளையிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வெள்ளவத்தை மெனிங் சந்தையில் உள்ள களஞ்சியசாலை ஒன்றில் இருந்து ஆயிரத்து 486 கிலோகிராம் நிறையுடைய பத்திரிகைகளே கொள்ளையிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் வெள்ளவத்தை பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். கொள்ளையிடப்பட்ட பழைய பத்திரிகைகள் கொள்ளையிடப்பட்ட... Read more »

