சிகிரியாவை பார்வையிட செல்லும் சுற்றுலா பயணிகளுக்கான அறிவிப்பு!

சீகிரியாவை பார்வையிட செல்லும் சுற்றுலாப் பயணிகளுக்காக விசேட வேலைத்திட்டங்களை முன்னெடுக்கவுள்ளதாக புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் விதுர விக்ரமநாயக்க தெரிவித்துள்ளார். அதன்படி, வெளிநாட்டு பயணிகளுக்கு 10 மொழிகளில் சீகிரியா குன்று தொடர்பான தெளிவூட்டல்களை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மொழிப் பிரச்சினையால் இலங்கைக்கு... Read more »

கொழும்பு திரையரங்கின் கழிவறைக்குள் உயிரிழந்த பெண்!

கொழும்பு, கொள்ளுப்பிட்டியிலுள்ள பிரபல திரையரங்கு ஒன்றில் கழிப்பறையில் பெண் ஒருவர் திடீரென உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கொழும்பு 15, ஜம்பட்டா வீதியில் வசிக்கும் 70 வயதுடைய விஜய லக்ஷ்மி பீரிஸ் என்ற வயோதிப பெண் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். உயிரிழந்த பெண்... Read more »
Ad Widget

திடீரென தீப்பற்றிய வீடு!

இரத்தினபுரி – மல்வல வீதி பகுதியிலுள்ள வீடொன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். வீடொன்று தீப்பற்றி எரிவதாக இரத்தினபுரி பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் உடனடியாக செயற்பட்ட இரத்தினபுரி தீயணைப்பு பிரிவினர் தீயை அணைத்துள்ளனர். இந்த விபத்தில் வீட்டின் இரண்டு அறைகள் எரிந்து... Read more »

லிட்ரோ சமையல் எரிவாயுவின் விலை அதிகரிப்பு!

லிட்ரோ சமையல் எரிவாயுவின் விலை அதிகரிகப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி 12.5 கிலோகிராம் எடையுடைய லிட்ரோ சமையல் எரிவாயுவின் விலை 75 ரூபாவால் அதிகரிக்கப்படுவதாக லிட்ரோ எரிவாயு நிறுவனத்தின் தலைவர் அறிவித்துள்ளார். தீர்மானத்திற்கான காரணம் உலக சந்தையில் ஏற்பட்டுள்ள விலை அதிகரிப்பு காரணமாக இந்த தீர்மானம்... Read more »

நான்காவது முறையாகவும் பொலிஸ்மா அதிபரின் பதவிக்காலம் நீடிப்பு!

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் , பொலிஸ் மா அதிபர் சி.டி.விக்ரமரத்னவிற்குமேலும் சேவை நீடிப்பு வழங்கப்பட்டுள்ளது. பொலிஸ் மா அதிபர் சி.டி.விக்ரமரத்ன இந்த சேவை நீடிப்பு பெறுவது இது நான்காவது முறையாகும். இதற்கு முன்னர் சி.டி.விக்ரமரத்னவுக்கு மூன்று மாதங்கள் இரண்டு முறை மூன்று வாரங்கள் சேவை... Read more »

கொழும்பு மக்களுக்கான முக்கிய அறிவிப்பு!

தேசிய நீர் வழங்கல் மற்றும் அதிகார சபை கொழும்பின் பல பகுதிகளில் நாளைய தினம் (04.11.2023) 10 மணித்தியால நீர் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாகத் தெரிவித்துள்ளது. அதற்கமைய, கொழும்பு 11, 12, 13, 14 மற்றும் 15 ஆகிய பிரதேசங்களில்நாளை (04.11.2023) பி.ப. 7.00 மணி... Read more »

தீர்வு கிட்டும் வரை போராட்டம் தொடரும்!

நாட்டில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி காரணமாக வைத்தியர்கள் நாட்டை விட்டு வெளியேறுவதை உடனடியாக தடுத்தல், மருந்து தட்டுப்பாடு உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினர் நேற்று (02.11.2023) முதல் மாவட்ட ரீதியில் 24 மணிநேர பணிப்புறக்கணிப்பு போராட்டத்தை ஆரம்பித்துள்ளார்கள். இதேவேளை இன்றையதினம்... Read more »

தங்க நகை பிரியர்களுக்கான செய்தி!

இலங்கையில் நாளாந்தம் தங்கத்தின் விலை ஏற்ற, இறக்கத்துடன் பதிவாகி வருகின்றது. இதற்கமைய இலங்கையின் இன்றைய (03) தங்க நிலவரம் தொடர்பான தகவல்கள் வெளியாகியுள்ளன. விலை நிலவரம் இன்றைய தங்க நிலவரத்தின்படி, 24 கரட் 1 கிராம் தங்கத்தின் விலை 23,030 ரூபாவாக பதிவாகியுள்ளது. அதன்படி... Read more »

தலை துண்டிக்கப்பட்ட நிலையில் இளைஞரின் சடலம் மீட்பு!

இராகலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஹரஸ்பெத்த பகுதியில் சுமார் ஆயிரம் அடி உயரம் கொண்ட தர்பனா எல மலை அடிவார பகுதியில் உடல் பாகங்கள் சிதைந்த நிலையில் உயிரிழந்த இளைஞரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. குறித்த சடலத்தை நேற்று (02.11.2023) மாலை மீட்டுள்ளதாக இராகலை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.... Read more »

நாட்டில் டெங்கு நோய் அதிகரிப்பு!

நாட்டில் டெங்கு நோய் தாக்கம் அதிகரித்துள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு அறிவித்துள்ளது. ஜனவரி மாதம் முதல் நவம்பர் மாதம் வரையிலான காலப்பகுதியில் 68,497 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பாதிப்பு விபரம் இதேவேளை கடந்த சில மாதங்களில் மாத்திரம் டெங்கு நோயினால் 32... Read more »