போலியான முகநூலை திறந்து, அதில் ஒரு பெண்ணின் புகைப்படத்தை போலியாக நிர்வாணப்படுத்தி, பதிவிட்ட நபர் ஒருவருக்கு இரண்டு வருட கடூழிய சிறைத்தண்டனை விதித்து அக்கரைப்பற்று நீதிவான் நீதிமன்ற நீதிபதி எம்.எச்.எம்.ஹம்சா தீர்ப்பளித்தார். நேற்று (07) அக்கரைப்பற்று நீதிமன்றில் இவ்வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோதே சந்தேக நபருக்கு... Read more »
இலங்கையில் முழுமையாக செவித்திறன் குறைபாடுள்ள 4 இலட்சம் பேர் அடுத்த வருடம் (2024) சாரதி அனுமதிப்பத்திரத்தை பெற்றுக்கொள்ள முடியும் என மோட்டார் போக்குவரத்து திணைக்கள ஆணையாளர் நாயகம் நிஷாந்த அனுருத்த வீரசிங்க தெரிவித்தார். மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தினால் கம்பஹா மாவட்டத்தில் முன்னோடி திட்டமாக இந்த... Read more »
கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையத்தின் செயற்பாடுகள் அடுத்த வருடம் ஜூன் மாதம் முதலாம் திகதி ஆரம்பிக்கப்படும் என துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் விமான சேவைகள் அமைச்சு தெரிவித்துள்ளது. 6 நவீன கிரேன்களின் உதவியுடன் கொள்கலன் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாக அதன் செயலாளர் கே.டி.எஸ்.ருவன்சந்திர குறிப்பிட்டுள்ளார்.... Read more »
பெற்றோரிடம் பொய் சொல்லிவிட்டு குளத்தில் குளிப்பதற்குச் சென்ற 15 வயதுடைய பாடசாலை மாணவர்கள் இருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் குருணாகல், பன்னல பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது. மாணவர்கள், பம்புகுளிய பிரதேசத்தில் மணல் அகழ்வு காரணமாக மாஓயாவை அடுத்துள்ள குளத்தில்... Read more »
உழைக்கும் மக்களின் சம்பளம் அதிகரிக்கப்பட்டதன் பின்னரே நாடாளுமன்ற உறுப்பினர்களின் சம்பளம் அதிகரிக்கப்பட வேண்டுமென முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். மத்தேகொட பிரதேசத்தில் இடம்பெற்ற சமய நிகழ்வு ஒன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். அடுத்த வருடம் நிச்சயம்... Read more »
அரச நிறுவனங்கள் எவ்வாறு செயற்பட வேண்டிய வழிகாட்டல்களை வெளியிடவுள்ளதாக மனித உரிமைகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. டிசம்பர் 10 ஆம் திகதி அனுஷ்டிக்கப்படும் சர்வதேச மனித உரிமைகள் தினத்தை முன்னிட்டு எதிர்வரும் 11 ஆம் திகதி நடைபெறவுள்ள நிகழ்வில் இந்த வழிகாட்டல்கள் வெளியிடப்படவுள்ளன. இந்த வழிகாட்டல்களில்... Read more »
இலங்கையில் டெங்கு காய்ச்சல் வேகமாக பரவி வருவதாக சுவாச நோய் மருத்துவர் ஆஷா சமரநாயக்க தெரிவித்துள்ளார். இருமல் மற்றும் சளி டெங்குவின் அறிகுறியாக இருக்கலாம் என அவர் குறிப்பிட்டுள்ளார். இருமல் மற்றும் சளியுடன் காய்ச்சலும் இருந்தால் இரத்த பரிசோதனை செய்து கொள்ளுமாறும் வைத்தியர் அறிவுறுத்தியுள்ளார்.... Read more »
நெடுந்தீவு கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்டபோது கைது செய்யப்பட்ட 13 இந்திய மீனவர்களும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். நெடுந்தீவு பகுதியில் 13 இந்திய மீனவர்களுடன் 3 படகுகளையும் இலங்கை கடற்படையினர் நேற்று (2023.12.06) கைப்பற்றினர். இந்திய மீனவர்கள் இன்று ஊர்காவற்றுறை நீதிமன்றத்தின் பதில் நீதவான் சரோஜினிதேவி... Read more »
பலாங்கொடை – ஹட்டன் பிரதான வீதியில் பலாங்கொடை பின்னவல பகுதியில் பாரிய மண்சரிவொன்று ஏற்பட்டுள்ளது. கடும் மழை இதன்காரணமாக பலாங்கொடை – ஹட்டன் பிரதான வீதியில் இன்று (2023.12.08) அதிகாலை முதல் போக்குவரத்து முற்றாக தடைப்பட்டுள்ளது. நேற்று இரவு பெய்த கடும் மழையுடன் குறித்த... Read more »
பொதுவாக இலங்கையிலிருந்து வேறு நாடுகளுக்கு செல்லும் பயணிகள் முதலில் கடவுச்சீட்டை பெற்றுக் கொள்ள வேண்டும். இதற்கு என்ன செய்ய வேண்டும்? யாரை பார்க்க வேண்டும்? இப்படியான விடயங்களை எங்கு தெரிந்து கொள்ளலாம் என சந்தேகத்தில் சிலர் இருப்பார்கள். இது போன்ற சந்தேகங்களை இந்த பதிவின்... Read more »

