அரச அதிகாரிகள் பயங்கரவாதிகள் போல் செயற்படுகின்றனர்: ரவி கருணாநாயக்க

நாட்டின் ஜனாதிபதி தலைமையிலான அமைச்சரவை எடுக்கும் முடிவுகளை அரச அதிகாரிகள் நடைமுறைப்படுத்தாது, நாட்டை நெருக்கடிக்குள் தள்ளி மக்களை சிரமங்களுக்கும் அசௌகரியங்களுக்கும் உள்ளாகி வருவதன் மூலம் அரச அதிகாரிகளின் பயங்கரவாதம் தெளிவாகியுள்ளதாக முன்னாள் அமைச்சர் ரவி கருணாநாயக்க குற்றம் சுமத்தியுள்ளார். இலங்கையில் 17 லட்சம் அரச... Read more »

மூன்று உயிர்களை காவு கொண்ட நாரம்மல்ல விபத்து

நாரம்மல – கிரியுல்ல பிரதான வீதியில் கிவுல்கல்ல வளைவுக்கு அருகில் இன்று காலை இடம்பெற்ற விபத்தில் மூவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதுடன் ஒருவர் காயமடைந்துள்ளார். காயமடைந்த நபர் குருநாகல் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விபத்து முச்சக்கர வண்டியொன்றும் பாரவூர்தி ஒன்றும் மோதியதில்... Read more »
Ad Widget

பாலியல் குற்றங்கள் அதிகரிப்பு

பாலியல் குற்றங்கள் வருடாந்தம் அதிகரித்து வருவதாக பொலிஸ் சிறுவர் மற்றும் மகளிர் பணியகம் தெரிவித்துள்ளது. கடந்த வருடம் 18 வயதுக்குட்பட்ட 1,502 சிறுமிகள் வன்புணர்வுக்கு உள்ளானதாக அதன் பிரதிப் பொலிஸ் மா அதிபர் ரேணுகா ஜயசுந்தர தெரிவித்துள்ளார். பாலுறவுக் கல்வி தொடர்பில் பிள்ளைகளுக்குத் தெரியப்படுத்துவது... Read more »

இன்றைய வானிலை

வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் பரவலாக மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. வடமத்திய, கிழக்கு, மத்திய, ஊவா மற்றும் வடமேல் மாகாணங்களில் அவ்வப்போது 40 கிலோ மீற்றர் வேகத்தில் காற்று வீசக்கூடும் என அந்த திணைக்களம் அறிக்கை ஒன்றை... Read more »

சிதறிக்கிடக்கும் தலைமைத்துவத்தை சிறீதரன் ஒன்றிணைக்க வேண்டும்

சிதறிக்கிடக்கும் தலைமைத்துவத்தை சிறீதரன் ஒன்றிணைக்க வேண்டும் என்று நாடு கடந்த தமிழீழ அரசாங்க உறுப்பினர் நிமால் விநாயகமூர்த்தி வலியுறுத்தியுள்ளார். இலங்கை தமிழரசுக் கட்சியின் புதிய தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ள சிவஞானம் சிறீதரனுக்கு அவர் அனுப்பிய வாழ்த்துச் செய்தியிலேயே இந்த விடயம் வலியுறுத்தப்பட்டுள்ளது. அத்துடன், நிலத்திலும்... Read more »

சூடுபிடிக்கும் இலங்கை தேர்தல் களம்

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட முன்னாள் அமைச்சர் ரொஷான் ரணசிங்க அணியில் பலர் தயாராக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அது தொடர்பில் ரொஷான் ரணசிங்கவின் புதிய அரசியல் அணியுடன் இணைந்து செயற்படும் களுத்துறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் லலித் எல்லாவல ஊடகங்களிடம் கருத்து வௌியிட்டுள்ளார். தொடர்ந்தும்... Read more »

ஐ.எம்.எப். உடன் கலந்துரையாடலுக்கு தயாராகுங்கள்

சர்வதேச நாணய நிதியத்துடனான ஒப்பந்தத்தில் இருந்து இலங்கை விலகிக் கொண்டால் நாட்டின் பொருளாதாரம் தொடர்பில் மீண்டும் நம்பிக்கை வைக்க முடியாது என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். அத்துடன், அனைவரும் ஒன்றிணைந்து பொதுவான உடன்படிக்கையுடன் நாட்டை வெற்றிப்பாதையில் கொண்டு செல்ல வேண்டும் என்றும் அவர்... Read more »

அடுத்த வாரம் முதல் விசேட வேலைத்திட்டம்

சாரதிகள் விதிமுறைகளை கடைப்பிடிக்காததே அதிவேக நெடுஞ்சாலைகளில் ஏற்படும் விபத்துக்களுக்கு முக்கிய காரணம் என போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். அதிவேக நெடுஞ்சாலையில் விதிகளை மீறும் சாரதிகளுக்கு எதிராக மேற்கொள்ளக்கூடிய நடவடிக்கைகள் குறித்து அடுத்த வாரம் முதல் விசேட வேலைத்திட்டம் அமுல்படுத்தப்படவுள்ளது.... Read more »

லிட்ரோ கேஸ் நிறுவனத்தை தனியார்மயப்படுத்த தீர்மானம்

லிட்ரோ கேஸ் நிறுவனத்தை தனியார் மயப்படுத்துவதற்கான விருப்பமனு கோரப்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது. லிட்ரோ கேஸ் நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஸ் கொழும்பில் இன்று (26) நடத்திய ஊடக சந்திப்பில் இந்தத் தகவலை வௌியிட்டுள்ளார். கடந்த காலங்களில் லிட்ரோ நிறுவனத்தை தனியார் மயப்படுத்த பல்வேறு முயற்சிகள்... Read more »

புதிய சட்டம் மேற்குலகம் கவலை: முடங்கும் டிஜிட்டல் பொருளாதாரம்

இணையதளங்கள் மற்றும் சமூக வலையதங்களை ஒழுங்குப்படுத்தும் நோக்கில் அரசாங்கம் நிகழ்நிலை காப்புச் சட்டமூலத்தை கடந்த பாராளுமன்ற அமர்வில் நிறைவேற்றியுள்ளது. சட்டமூலம் நிறைவேற்றப்பட்டது முதல் அரசாங்கம் பல்வேறு பிரச்சினைகளுக்கு முகங்கொடுக்கும் சூழ்நிலை உருவாகியுள்ளது. சமூக வலையதளங்கள் மற்றும் இணையதளங்கள் ஊடாக இலங்கை டிஜிட்டல் பொருளாதார பன்மடங்கு... Read more »